பட்ஜெட் விலை யு-கோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான காப்புரிமையை பெற்றது ஹோண்டா… ஓலாவுக்கு ஆப்பு ரெடி!

பிரபல இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹோண்டா இந்தியாவில் புதுமுக ஸ்கூட்டர் ஒன்றிற்காகப் பேடண்டை செய்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. யு-கோ எனப் பெயர் கொண்ட பட்ஜெட் விலை இருசக்கர வாகனத்திற்கே நிறுவனம் காப்புரிமையைப் பெற்றிருக்கின்றது.

பட்ஜெட் விலை யு-கோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான காப்புரிமையை பெற்றது ஹோண்டா... ஓலாவுக்கு ஆப்பு ரெடி!

பிரபல இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹோண்டா இந்தியாவில் புதுமுக ஸ்கூட்டர் ஒன்றிற்காக பேடண்டை செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. யு-கோ என பெயர் கொண்ட பட்ஜெட் விலை இருசக்கர வாகனத்திற்கே நிறுவனம் காப்புரிமையைப் பெற்றிருக்கின்றது.

பட்ஜெட் விலை யு-கோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான காப்புரிமையை பெற்றது ஹோண்டா... ஓலாவுக்கு ஆப்பு ரெடி!

இத்தகைய மிக சிறப்பான எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கே ஹோண்டா நிறுவனம் இந்தியாவில் தற்போது காப்புரிமையைப் பெற்றிருக்கின்றது. 1992 ஆம் ஆண்டில் குவாங்சோ மோட்டார்ஸ் குழுமம் மற்றும் ஜப்பான் ஹோண்டா மோட்டார் ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து வுயாங் – ஹோண்டா மோட்டார்ஸ் (குவாங்சோ) எனும் கம்பெனியை உருவாக்கியது.

பட்ஜெட் விலை யு-கோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான காப்புரிமையை பெற்றது ஹோண்டா... ஓலாவுக்கு ஆப்பு ரெடி!

இந்த நிறுவனத்தின் வாயிலாகவே யு-கோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உருவாக்கப்பட்டு, விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டது. இரண்டு விதமான தேர்வுகளில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. 1.2 kW வழங்கும் மின் மோட்டார் (ஆரம்ப நிலை வேரியண்ட்) மற்றும் 1.8 kW மின் மோட்டார் (உயர் நிலை வேரியண்ட்) என இரு விதமான மின் மோட்டார் தேர்வுகளில் யு-கோ விற்பனைச் செய்யப்படுகின்றது.

பட்ஜெட் விலை யு-கோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான காப்புரிமையை பெற்றது ஹோண்டா... ஓலாவுக்கு ஆப்பு ரெடி!

இவையிரண்டும் மாறுபட்ட வேகத்தை வெளிப்படுத்தக் கூடியவையாக காட்சியளிக்கின்றன. அந்தவகையில், ஆரம்ப நிலை வேரியண்ட் மணிக்கு 43 கிமீ வேகத்தில் மட்டுமே இயங்கக் கூடியதாகக் காட்சியளிக்கின்றது. அதேவேலையில், உயர்நிலை வேரியண்ட் மணிக்கு 53 கிமீ வேகத்தில் இயங்கும். இவையிரண்டும் ஓர் முழு சார்ஜில் 65 கிமீ ரேஞ்ஜை தரும்.

பட்ஜெட் விலை யு-கோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான காப்புரிமையை பெற்றது ஹோண்டா... ஓலாவுக்கு ஆப்பு ரெடி!

இதற்காக 48 வோல்ட் லித்தியம் அயன் பேட்டரி பேக் ஸ்கூட்டரில் பயன்படுத்தப்பட்டுள்ளது. “ரொம்ப சின்ன பேட்டரி பேக்கா இருக்கே, இது எங்களுக்கு போதாது” என்பவர்களுக்காக பிரத்யேகமாக பெரிய பேட்டரி தேர்வை ஹோண்டா விற்பனைக்கு வழங்குகின்றது. அது 130 கிமீ வரை ரேஞ்ஜ் தரும். ஆனால், இதன் விலை சற்று அதிகம்.

பட்ஜெட் விலை யு-கோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான காப்புரிமையை பெற்றது ஹோண்டா... ஓலாவுக்கு ஆப்பு ரெடி!

7,499 – 7,988 சீனா யுவான்களுக்கு அது விற்கப்படுகின்றது. இந்திய ரூபாய் மதிப்பில் பார்த்தோமேயானால் ரூ. 87 ஆயிரம் தொடங்கி ரூ. 93 வரையில் அது விற்பனைச் செய்யப்படுகின்றது. இது தோராயமான மதிப்பு மட்டுமே ஆகும். எலெக்ட்ரிக் மிகவும் அட்டகாசமான தோற்றத்தில் காட்சியளிக்கின்றது.

பட்ஜெட் விலை யு-கோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான காப்புரிமையை பெற்றது ஹோண்டா... ஓலாவுக்கு ஆப்பு ரெடி!

ஸ்டைல் மட்டுமல்ல இருசக்கர வாகனத்தில் இடம் பெற்றிருக்கும் சிறப்பம்சங்கலும் வேற லெவலில் காட்சியளிக்கின்றன. எல்சிடி இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், யுஎஸ்பி சார்ஜிங் போர்ட், ஆன்டி தெஃப்ட் அலாரம், 26 லிட்டர் ஸ்டோரேஜ் ஸ்பேஸ், பெரிய கால் வைக்கும் இடம், எல்இடி ஹெட்லேம்ப், பகல் நேரத்தில் ஒளிரும் மின் விளக்கு, எல்இடி இன்டிகேட்டர் உள்ளிட்ட அம்சங்கள் யு-கோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் வழங்கப்பட்டுள்ளன.

பட்ஜெட் விலை யு-கோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான காப்புரிமையை பெற்றது ஹோண்டா... ஓலாவுக்கு ஆப்பு ரெடி!

இதுமட்டுமின்றி, மிக கம்ஃபோர்ட்டான வசதியை வழங்கும் இருக்கை, உயரமான ஹேண்டில் பார், யு-கோ என்ற வார்த்தை பொறிக்கப்பட்ட கருப்பு நிற அலாய் வீல்கள், முன் பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்கும் – பின் பக்கத்தில் ஷாக் அப்சார்பர் உள்ளிட்ட அம்சங்களும் ஸ்கூட்டரில் வழங்கப்பட்டுள்ளன.

பட்ஜெட் விலை யு-கோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான காப்புரிமையை பெற்றது ஹோண்டா... ஓலாவுக்கு ஆப்பு ரெடி!

மிக சிறந்த பிரேக்கிங்கை வழங்க வேண்டும் என்பதற்காக டிஸ்க் பிரேக்குகள் முன் மற்றும் பின் வீலில் வழங்கப்பட்டிருக்கின்றன. மேலும், மிக முக்கியமான அம்சமாக ப்ளூடூத் இணைப்பு மற்றும் ஜிபிஎஸ் போன்ற நவீன-கால தொழில்நுட்ப கருவிகளிலும் ஹோண்டா யு-கோ-வில் இடம் பெற்றிருக்கின்றன.

பட்ஜெட் விலை யு-கோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான காப்புரிமையை பெற்றது ஹோண்டா... ஓலாவுக்கு ஆப்பு ரெடி!

ஹோண்டா நிறுவனம் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை மிக உறுதியான ஸ்டீல் பைப்புகளால் உருவாக்கியிருக்கின்றது. ஆகையால், இது இந்தியா போன்ற கடினமான சாலைகளைக் கொண்ட நாடுகளுக்கு உகந்த வாகனமாக காட்சியளிக்கின்றது. மிக சமீபத்திலேயே ஹோண்டா நிறுவனம் பிசிஎக்ஸ் மற்றும் எக்ஸ்-ஏடிவி வாகனங்களுக்கு காப்புரிமையைப் பெற்றது. இதைத் தொடர்ந்து, தற்போது புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கும் ஹோண்டா பேடண்டை பெற்றிருக்கின்றது. இதன் இந்திய வருகை ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு ஆப்பு வைக்கும் வகையில் அமையலாம் என தெரிகின்றது.

Source link

Please follow and like us:
icon Follow en US
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube