சிவில் சர்வீஸ் தேர்வுகளை பொறுத்தவரை ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை படித்த பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படும் என்றாலும், ஒரு சில நேரத்தில் மிகவும் சிக்கலான கேள்விகளும் இருக்கும். பார்ப்பதற்கு எளிதாக தோன்றினாலும் ஒரு சிறிய டிவிஸ்ட் இருக்கும், நாம் பயங்கரமாக யோசித்து பதில் எழுத வேண்டிய அளவுக்கு கேள்விகளில் ட்விஸ்ட் இருக்கும்.
அந்த வகையில் கடந்த சில ஆண்டுகளில் கேள்விப்பட்ட மிகவும் சிக்கலான ஒரு சில கேள்விகளை இங்கே உங்களுக்காக வழங்கியுள்ளோம்.இந்த கேள்விகளுக்கு உங்களால் சரியான பதிலை கண்டுபிடிக்க முடியுமா என்பதை பாருங்கள். யு பி எஸ் சி தேர்வுகளுக்கு நீங்கள் தயார் செய்து கொண்டிருந்தால் பொதுத்தேர்வு ஒன்று மட்டும் பொதுத்தேர்வு இரண்டு தாள்களில் இவ்வகையான கேள்விகள் கேட்கப்படும்.
Also Read : NEET: கோச்சிங் சென்டர் செல்லாமல் நீட் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கான டிப்ஸ்..!
52 மாணவர்கள் உள்ள வகுப்பில் 15 மாணவர்கள் தோல்வியடைந்தனர். தோல்வியடைந்த மாணவர்களின் பெயர்களை நீக்கி, தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு அதில் ரமேஷ் முதலிடத்தில் இருந்து 22-வது இடம் பிடித்துள்ளார். முதலில் இருந்து கணக்கிட்டால் இருந்து அவர் எந்த இடத்தில் இருப்பார்?
(அ) 18வது
(ஆ) 17வது
(இ) 16வது
(ஈ) 15வது
கோபால் ஒரு செல்போனை வாங்கி ராமுக்கு 10 சதவீதம் லாபத்தில் விற்றார். பின்னர் ராம் அதை மீண்டும் கோபாலுக்கு 10 சதவீதம் நஷ்டத்தில் விற்க விரும்பினார். கோபால் அதை ஒப்புக்கொண்டால் கோபாலுக்கு என்ன கிடைக்கும்?
(அ) லாபம் நட்டம் இரண்டுமே இல்லை
(ஆ) 1 சதவீதம் லாபம்
(இ) 1 சதவீதம் நட்டம்
(ஈ) 0.5 சதவீதம் லாபம்
குறிப்பிட்ட, 2 இலக்க எண்கள் உள்ளன. அந்த எண்ணுக்கும், அதை மாற்றியமைக்கும் போது பெறப்பட்ட எண்ணுக்கும் இடையே உள்ள வித்தியாசம் எப்போதும் 27. இது போன்ற அதிகபட்ச 2 இலக்க எண்கள் எத்தனை உள்ளன?
(அ) 3
(ஆ) 4
(இ) 5
(ஈ) மேலே கூறிய எதுவும் இல்லை
4 செமீ x 4 செமீ x 4 செமீ கியூபின் வெளிப்புற மேற்பரப்பு முழுவதும் சிவப்பு நிறத்தில் வர்ணம் பூசப்பட்டுள்ளது. இது அறுபத்து நான்கு 1 செ.மீ x 1 செ.மீ x 1 செ.மீ சிறிய கியூப்கள் வரும் அளவுக்கு முகங்களுக்கு நேராக பேரலலாக வெட்டப்படுகிறது. எத்தனை சிறிய கனசதுரங்களில் வர்ணம் பூசப்பட்ட முகங்கள் இல்லை?
(அ) 8
(ஆ) 16
(இ) 24
(ஈ) 36
150 பக்கங்களைக் கொண்ட ஒரு புத்தகத்தில் 1 முதல் 150 வரை எண்ணப்பட வேண்டும் என்றால், அச்சிடப்பட்ட மொத்த இலக்கங்களின் எண்ணிக்கை என்ன?
(அ) 262
(ஆ) 342
(இ) 360
(ஈ) 450
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.