கார்த்தி: விக்ரம்: கமல் சாரின் அந்த அவதாரத்தை பார்க்க காத்திருக்க முடியவில்லை… பிரபல நடிகர் டிவிட்! – விக்ரம் படத்தில் கமலின் புதிய அவதாரத்தைப் பார்க்க நடிகர் கார்த்தி ஆர்வமாக உள்ளார்


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகியுள்ளது. விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாஸில், நரேன், காளிதாஸ் ஜெயராம் உட்பட பலர் நடித்துள்ளனர். நடிகர் சூர்யா கவுரவத் தோற்றத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

படம் வெளியான முதல் நாள் முதல் காட்சியிலேயே பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. ஒவ்வொரு காட்சியையும் இன்ச் பை இன்ச்சாக ரசித்து வருகின்றனர் ரசிகர்கள். படத்தில் யாரை புகழ்வது என்றே தெரியவில்லை, அந்தளவுக்கு லோகேஷ் கனகராஜ் அனைவரிடமும் சிறப்பாக வேலை வாங்கியுள்ளார் என பாராட்டி வருகின்றனர்.
Meera Mithun: நான் வாழ்ந்தா போதும்.. என்னை விட்டுடுங்க… நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்ட மீரா மிதுன்!

இதேபோல் அனிருத்தின் இசையையும் பாராட்டி தள்ளியுள்ளனர். இந்நிலையில் நடிகரும் நடிகர் சூர்யாவின் தம்பியுமான கார்த்தி விக்ரம் படம் குறித்து டிவிட்டுள்ளார். அதில் கமல் சாரின் ஆக்ஷன் அவதாரத்தைப் பார்க்க காத்திருக்க முடியவில்லை. படத்தைப் பற்றி நிறைய நல்ல விஷயங்களைக் கேட்கிறேன்! இயக்குநர் லோகேஷ் மற்றும் படக்குழு அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.
மொத்த சினிமாவையும் தெறிக்கவிட்ட ‘விக்ரம்’!

கார்த்தியின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் உங்கள் அண்ணன் சூர்யா பட்டையை கிளப்பியுள்ளார். உங்களின் கேமியோவைதான் மிஸ் பண்ணிவிட்டோம். விக்ரம் 3 படத்தின் முக்கிய கதாப்பாத்திரத்தில் நீங்கள் நடிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.Source link

Please follow and like us:
icon Follow en US
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube