SBI வங்கியில் SBI ஆட்சேர்ப்பு 2022 காலியிடங்கள் தகுதி, சம்பளம் மற்றும் பலவற்றை இங்கே சரிபார்க்கவும்


ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்.பி.ஐ) வங்கியில் ஓய்வு பெற்ற அதிகாரிகளுக்கான வேலைவாய்ப்பிற்கான தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன. இதற்கு விண்ணப்பிப்பதற்காக எஸ்.பி.ஐ வாங்கி அழைப்பு விடுத்துள்ளது. அதன்படி, இந்த வேலைவாய்ப்புகள் அனைத்தும் ஒப்பந்த அடிப்படையில் கிடைக்கின்றன என்று சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வேலைவாய்ப்பின் மூலம் நிறுவனத்தில் மொத்தம் 641 காலிப்பணியிடங்களை எஸ்.பி.ஐ வங்கி நிரப்ப உள்ளதாகவும் கூறியுள்ளது.

எஸ்.பி.ஐ வங்கியில் பணிபுரிய வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம். எனவே, ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளமான sbi.co.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மேலும் இதுகுறித்த மற்ற விவரங்களை இந்த பதிவில் இனி விரிவாக பார்ப்போம்.

SBI வேலைவாய்ப்பு தேதிகள்:

இந்த வேலைவாய்ப்பு குறித்த ஆன்லைன் விண்ணப்பங்கள் மே 18, 2022 அன்று முதல் தொடங்கப்பட்டது. இதில் விண்ணப்பிக்க விரும்புவோர் ஜூன் 07-க்கு முன்னர் விண்ணப்பிக்க வேண்டியது அவசியம். ஏனெனில் இது தான் விண்ணப்பிக்க வேண்டியதற்கான கடைசி நாளாக அறிவித்துள்ளனர். மேலும் விண்ணப்பிப்பதற்கு முன்னர் அதில் கேட்டுள்ள அனைத்து தகவல்களையும் முன்னதாக எடுத்துக்கொண்டு படிவங்களை நிரப்புவது சிறந்தது. இல்லையேல் தவறுகள் ஏதேனும் நடந்தால் கூட அவசியத் திருத்தம் செய்வதில் பல சிக்கல்கள் ஏற்படும்.

காலி இடங்கள் :

எஸ்.பி.ஐ வங்கியில் தற்போது வேலைவாய்ப்புகள் படி, பல்வேறு காலி இடங்கள் உள்ளதாக கூறியுள்ளனர். அதன்படி, 503 சேனல் மேலாளர் (CMF-AC) பதவிகளும், 130 சேனல் மேலாளர் மேற்பார்வையாளர்-எனிடைம் சேனல்கள் (CMS-AC) பதவிகளும் உள்ளன. இவை சேனல் மேலாளர் நிலையை சார்ந்தவை. அடுத்ததாக, உதவி நிலையில் 8 உதவி அதிகாரி (SO-AC) பதவிகள் உள்ளதாக அறிவிப்பு வந்துள்ளது,

மேலும் படிக்க: ஐடிஐ படித்தவர்களுக்கு சிஎஸ்ஐஆர் மெட்ராஸ் வளாகத்தில் அப்ரண்டிஸ் பணி

சம்பள விவரங்கள் :

எஸ்.பி.ஐ வங்கியில் மேலே குறிப்பிட்டுள்ள ஒவ்வொரு பதிவிக்கும் ஏற்ப அவர்களின் சம்பளம் மாறுபடும். அதன்படி, சேனல் மேலாளர் வசதியாளர் (CMF-AC) பதவிக்கு மாதம் ரூ.36,000 சம்பளமும், சேனல் மேலாளர் மேற்பார்வையாளர் (CMS-AC) பதவிக்கு மாதம் ரூ.41,000 சம்பளமும், உதவி அதிகாரி (SO-AC) பதவிக்கு மாதம் ரூ.41,000 சம்பளமும் வழங்கப்படுகிறது. மேலும், இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், அதற்கான தகுதிகளை அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும்.

மேலும் படிக்க: நீங்க 30 வயது நபரா?.. வேலை விஷயத்தில் இந்த தவறை இனியும் செய்யாதீங்க..

இது குறித்த விரிவான தகவல்கள் அனைத்துமே எஸ்.பி.ஐ வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளமான sbi.co.in என்கிற தளத்தில் குறிப்பிடப்பட்டது. எனவே, மேற்குறிப்பிட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அந்தந்த பதவிக்கான படிப்பு மற்றும் பிற தகுதி நிலைகளை அறிந்து கொண்டு விண்ணப்பிப்பது நல்லது. அதே போன்று வயது வரம்பும் மாறுபடும். எனவே, இதையும் கருத்தில் கொள்ளுதல் அவசியம். எஸ்.பி.ஐ வங்கி அறிவித்துள்ள இந்த வேலை வாய்ப்புகளுக்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டிய கடைசி நாள் ஜூன் 7 ஆகும்.

இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரையிலான செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.



Source link

Please follow and like us:
icon Follow en US
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube