கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 21 மே, 2022 04:32 AM
வெளியிடப்பட்டது: 21 மே 2022 04:32 AM
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 21 மே 2022 04:32 AM

சென்னை: பெண்களுக்கான உலக குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்றுள்ள நிகத் சரீனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
பெண்களுக்கான உலக குத்துச்சண்டை தொடரில் அதிரடியாக விளையாடி தங்கம் வென்றுள்ள நிகத் சரீனுக்கு பாராட்டுகள். இவ்வெற்றிக்கு நீங்கள் முழு தகுதியானவர். நிசாமாபாத்தில் இருந்து இஸ்தான்புல் வரையிலான உங்கள் வெற்றி, மேலும் பல பெண்கள் தங்கள் கனவுகளை நம்பிக்கையுடனும் உறுதியுடனும் தொடர மிகச் சிறந்த ஊக்க சக்தியாக விளங்கும்.
இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.