பிரபல நடிகரின் படத்தை பார்த்து அந்த படத்திற்கு முதலமைச்சர் வரிவிலக்கு அறிவித்துள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘2.0’ தமிழ்ப்படத்திலும், ஏராளமான பாலிவுட் படங்களில் நடித்தவர் நடிகர் அக்ஷய்குமார். இவரது நடிப்பில் உருவாகியுள்ள பாலிவுட் திரைப்படம் ‘சாம்ராட் பிரித்விராஜ்’. சரித்திர கதையம்சம் கொண்ட இந்த படம் தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் ஜூன் மூன்றாம் தேதி வெளியாக உள்ளது.
250 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த படத்தில் அக்ஷய்குமார், சஞ்சய் தத், சோனு சூட், மனுஷி ஷில்லார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை சந்திரபிரகாஷ் திவேதி என்பவர் இயக்கியுள்ளார் .
இந்த நிலையில் சமீபத்தில் உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இந்தப் படத்தை தனது கேபினட் அமைச்சர்களுடன் பார்த்தார். படம் பார்த்து முடித்த படக்குழுவினர்களுக்கு தனது பாராட்டை தெரிவித்ததோடு, இந்த படத்திற்கு உத்தரபிரதேச மாநிலத்தில் வரிவிலக்கு தருவதாக அறிவித்தார். இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.