கடந்த, 2019 டிசம்பர் தொடக்கத்தில் சீனாவின் வூஹான் நகரில் உள்ள கடல் உணவு சந்தையில் கொரோனா வைரஸ் முதன்முறையாக கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது. மிகக் குறுகிய காலத்திலேயே இந்த வைரஸ் சீனாவின் அனைத்து மாகாணங்களுக்கும் பரவியது. ஆயிரக்கணக்கான மக்கள் மாண்டனர். கொரோனா பரவலின் மையப்புள்ளியாக வூஹான் நகரம் காணப்பட்டது. சீனாவின் ஹூபே மாகாணம் தொடர்ந்து மூடப்பட்டிருப்பதால் ஹூபே மாகாணத்தின் அருகில் உள்ள நகரங்களிலும், வூஹானிலும் உள்ள இந்திய மாணவர்களையும் மற்றும் பணிகளில் இருப்போரையும் மத்திய அரசு வெளியேற்றியது.
மருத்துவப் படிப்பிற்காக பாகிஸ்தான் செல்வதை தவிர்க்க வேண்டும் – தேசிய மருத்துவ ஆணையம்
இதனையடுத்து, இந்தியாவில் மூன்று பெரிய கொரோனா அலைகள் உருவாகின. லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இதன் காரணமாக, கடந்த இரு ஆண்டுகளாக சீனா – இந்தியா நாடுகளுக்கான இயல்பான விமான போக்குவரத்து முற்றிலும் தடைபட்டது. கடந்தாண்டு மார்ச் மாதம், சீனா தனது எல்லைகளைத் திறந்தாலும், மாணவர்களின் கல்வி விசாவை தொடர்ந்து தவிர்த்து வந்தது.
இதன்காரணமாக, சீனாவில் இருந்து திரும்பிய 23,000க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக செய்வதறியாமல் திகைத்து வந்ததனர். சீனாவில் பயின்று தற்போது பயிற்சி மருத்துவராக இருந்து வரும் மாணவர்கள், தங்கள் பயிற்சியை இந்தியாவில் நிறைவு செய்யும் வகையில் அனுமதி வழங்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில், இந்திய மருத்துவ மாணவர்கள் சீனாவில் உள்ள தங்கள் கல்லூரிகளுக்குத் திரும்புவது தொடர்பான முக்கிய அறிவிப்பை அந்நாடு வெளியிட்டுளளது.
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்னும் ஆறு நாட்களே உள்ளன
இதுகுறித்து வெளியான செய்தியில், ” சில முன்னுரிமை அடிப்படையில், தேவைகளுக்கு ஏற்ப மாணவர்கள் திரும்ப அழைக்கப்படுவார்கள். சீனாவுக்கு திரும்ப விருப்பமுள்ள மாணவர்கள் தங்கள் பெயரை இந்திய தூதரகத்திடம் பதிவு செய்ய வேண்டும். வரும் 8ம் தேதி கடைசி தேதியாகும். இந்தியத் தூதரகம் இந்த தகவலை சீன அரசிடம் பகிர்ந்து கொள்ளும். இதனடிப்படையில், மாணவர்கள் வரவழைக்கப்படுவார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.