இந்த படத்தில் கோவை சரளா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வழக்கமான காமெடி கதாபாத்திரங்களில் நடிக்கும் கோவை சரளா இந்த படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
மேலும்இந்த படத்தில் ‘குக் வித் கோமாளி’ படத்தின் புகழ் அஸ்வின்குமார் கதாநாயனாக நடிக்கிறார்.
இந்த படிவத்தை பூர்த்தி செய்து கவர்ச்சிகரமான பரிசை வெல்லுங்கள்
அஸ்வினுக்கு ஜோடியாக ரேயா நடித்துள்ளார். இந்தப் படத்தை டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இவர்களுடன் தம்பி ராமையா, நாஞ்சில் சம்பத், பழ.கருப்பையா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படம் முழுக்க முழுக்க பஸ் ஒன்றை மையமாக வைத்து படமாக்கப்பட்டுள்ளது.
உண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் இப்படத்தின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் வெளியாகவுள்ள இந்த படத்தின் டிரெய்லரை இயக்குனர் செல்வராகவன் வெளியிட்டுள்ளார். வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த டிரெய்லர் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
Sila Nerangalil Sila Manithargal – மனசு நெறஞ்சுருக்கு ; ரொம்ப சந்தோசம்!