சர்வதேச இசை நிறுவனமான கோக் ஸ்டுடியோ, முதன் முறையாக தமிழில் களமிறங்குகிறது. ‘கோக் ஸ்டூடியோ தமிழ்’ மூலம் 25-க்கும் மேற்பட்ட கலைஞர்களுடன் இணைந்து 8 பாடல்கள் முதல் சீசனில் வெளியிடப்பட்டுள்ளது. ‘இது நம்ம இசை’ என்ற பெயரில் தமிழ் கலாச்சாரம்,பண்பாட்டை சொல்லும் பாடல்கள் இடம்பெற்றுள்ளன.
முதல் சீசனில் அறிவு, ஷான் ரோல்டன், புஷ்பவனம் குப்புசாமி, கானா உலகநாதன், சஞ்சய் சுப்ரமணியன், சின்மயி, பென்னி தயாள், கதீஜா ரஹ்மான், முத்தம்மாள் மற்றும் முத்தையா உட்பட பலர் இணைகின்றனர். இந்தப் பாடல்கள் இசைச் செயலிகள், ஓடிடி மற்றும் கோக் ஸ்டூடியோ யூடியூப் தளங்களில் வெளியாகின்றன.