திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியல் 5-ம் தேதி ரிலீஸ்


கச்சத்தீவை தாரை வார்த்துக் கொடுத்து விட்டு தற்போது திமுக கட்சியினர் பிரதமர் நரேந்திர மோடியிடம் மீட்டுத்தாருங்கள் என்று வேண்டுகோள் விடுத்து கபடநாடகம் ஆடுகிறது பாஜக தலைவர் அண்ணாமலை பேச்சு. 5ம் தேதி அமைச்சர்களின் ஊழல் குறித்த ஆதாரங்களுடன் பட்டியல் வெளியிடப்படும், 15ம் தேதி ஆளுநரிடம் 700 பக்க திமுக ஊழல் குறித்த புத்தகம் வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில்  பிரதமர் நரேந்திர மோடியின் எட்டாண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்  நடைபெற்றது. இதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை  மத்திய அரசின் சாதனைகளை  எடுத்துரைத்தார்.  “தமிழகத்தில் எண்ணற்ற மத்திய அரசின் நலத்திட்டங்கள் நிறைவேற்றம் செய்துள்ளதை குறித்து  பேசினார். தாராபுரத்தை சேர்ந்த தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக இருக்கும் கயல்விழி செல்வராஜ்  ஒரு பொம்மை போல செயல்படுகிறார். ஆக்கப்பூர்வமான எந்த விஷயங்களிலும் தலையிடுவதில்லை. அவரது கணவர் செல்வராஜ் அவரை வழி நடத்துகிறார் என குற்றம்சாட்டினார் .

இதனை தொடர்ந்து மத்திய அரசு  நலத்திட்ட உதவிகள் பொதுமக்களுக்கு பயன்பெறும் வகையில் வழங்குகிறது.  மாநில திமுக அரசு அவற்றை தங்களது திட்டமாக ஸ்டிக்கர் ஒட்டி வெளியிட்டு தமிழக மக்களை ஏமாற்றி வருகின்றனர்.   ஊழல் மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்னை இவற்றை முன்னிறுத்தி திமுக ஆட்சி நடத்தி வருகிறது.  இதில்  குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 25-க்கும் மேற்பட்ட படுகொலைகள் சென்னையில் நடைபெற்றுள்ளது.

Also Read: சி.பொன்னையன் என்கிற அரசியல் ஆளுமையின் உண்மையான உயரம்..!

இரவு பகல் பாராமல் பொது இடங்கள் என்றும் இல்லாமல்  குற்றச் செயல்களை வெளிப்படையாக செய்து வருகின்றனர். இவர்கள் பெரும்பாலானோர் திமுகவின் குண்டர்கள்.  5ஆம் தேதி மதுரையில் நடைபெறும் நிகழ்ச்சியில் அமைச்சர் பெருமக்களின் சொத்துக்குவிப்பு ஊழல்களை  பட்டியலிட்டு ஆதாரபூர்வமான ஆவணங்கள் வெளியிடப்படும். திமுக தலைமையிலான அரசு மக்களை சுரண்டி எவ்வாறு செயல்படுகிறது என்பதை வரும் 5ஆம் தேதிக்கு மேல் தமிழக மக்களே கண்கூடாக பார்ப்பார்கள் என்று மத்திய அரசின் சாதனை பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை பேசினார்.

மேலும் 15 ம் தேதி ஆளுநரிடம் 700 பக்க திமுக ஊழல் குறித்த புத்தகம் வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.  பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் மாநில முதல்வர் மு.க.ஸ்டாலின்  சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தமிழகத்தை மட்டுமல்லாது ஒட்டுமொத்த தமிழர்களையும் இழிவுபடுத்தும் விதமாக கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் அவர்கள் பாரதபிரதமர் அவர்களிடம் கோரிக்கை வைத்தது மிகவும் வேடிக்கையாக இருந்தது.

அவர்களது ஆட்சியிலேயே கச்சதீவை கொடுத்துவிட்டு பின்பு பாரத பிரதமரிடம் மீட்டுத்தாருங்கள் என்று சொல்வது எவ்வகையில் நியாயம் என கேள்வி எழுப்பினார்.  இலங்கை மக்களுக்கு பாரதப் பிரதமர் அவர்கள் 40,000க்கும் மேற்பட்டோருக்கு வீடு கட்டி பாதிப்படைந்த மக்களை குடியமர்த்தி உள்ளார் இந்நிலையில் பாஜகவினர் வேண்டுமென்று இலங்கை தமிழர்களை புறக்கணித்தனர் என்று பொய்யான குற்றச்சாட்டை கூறி தமிழகத்தில் பாஜகவின் மீது வன்மத்தை கத்தி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

திமுகவின் கடந்த ஓராண்டு சாதனை என்பது மத்திய அரசின் கொண்டுவரப்பட்ட அத்துணை திட்டங்களுக்கும் தங்களது பெயரிட்டு ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது மட்டுமே. அவர்கள் செய்த ஓராண்டு சாதனை ஆகும் நிலைமை இவ்வாறு இருக்க மத்திய அரசை குறை சொல்லி தமிழர்களையும் தமிழகத்தையும் புறக்கணிக்கும் விதமாக நடந்து கொண்டு வருவது மிகவும் கண்டனத்துக்குரியது.

எனவே வருகின்ற ஐந்தாம் தேதி மதுரையில் நடக்கும் நிகழ்ச்சி ஒன்றில் தமிழக அமைச்சர்கள் அவர்களின் ஊழல் பட்டியல் வெளியிடுவதில் திட்டவட்டமாக இருக்கிறோம் என்றும் இதனை பொதுமக்கள் அனைவரும் அறிந்துகொள்ள விதம் வெளிப்படையாக இருக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம் என்று பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக அதன் தலைவர் அண்ணாமலை அவர்கள் தெரிவித்துள்ளதை அடுத்து தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.Source link

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube