இந்திய கடலோர காவல்படையில் வேலை … ரூ.19,900/- சம்பளம் – விண்ணப்பிக்க விவரங்கள்


இந்திய கடலோர காவல்படை இந்தியாவின் கடல் வளங்களைப் பாதுகாக்கும் பொருட்டு இது உருவாக்கப்பட்டது. இதன் பணி கடல் வளங்களைப் பாதுகாப்பது, கப்பல்களைப் பாதுகாப்பது, கடல் வழிக் குடியேற்றத்தைக் கண்காணிப்பது, கடல்வழி போதைப்பொருட்கள் இந்தியாவிற்குள் வராமல் தடுப்பது ஆகியனவாகும்.

கடலோரக் காவல்படையானது இந்தியக் கடற்படை, மீன் வளத்துறை, வருவாய் மற்றும் குடியேற்றத்துறை, காவல்துறை போன்றவற்றுடன் ஒத்துழைத்து தன் பணியைச் செய்கிறது. இதில் காலியாக உள்ள பணிகளுக்கு தற்போது காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க 09/07/2022ம் தேதி கடைசி நாள்.

விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் https://www.indiancoastguard.gov.in என்ற இணையதள பக்கத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.

வேலைக்கான விவரங்கள்:

நிறுவனம் / துறை இந்திய கடலோர காவல்படை பகுதி (மேற்கு) (ICGR)
பணிகள் மோட்டார் டிரான்ஸ்போர்ட் ஃபிட்டர், ஸ்ப்ரே பெயிண்டர், மோட்டார் டிரான்ஸ்போர்ட் மெக்கானிக்
விண்ணப்பிக்க கடைசி தேதி 09/07/2022
சம்பள விவரம் நிலை 2 ஊதிய அளவின் படி, ரூ.19,900/- சம்பளம் வழங்கப்படும்.
கல்வித் தகுதி விவரம் 10 ஆம் வகுப்பு தேர்ச்சிக்கு பின் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் ஐடிஐ, டிப்ளமோ படித்தவராக இருக்க வேண்டும்.
பிற தகுதிகள் Automobile Workshop-ல் பணி சார்ந்த துறைகளில் குறைந்தபட்சம் 02 வருடம் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
வயது தகுதி

குறைந்த பட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 27 வயது வரை விண்ணப்பிக்கத் தகுதி உடையவர்கள்.

SC / ST பிரிவினருக்கு 05 ஆண்டுகள் மற்றும் OBC பிரிவினருக்கு 03 ஆண்டுகள் வயது தளர்வு.

மொத்த காலிப்பணியிட விவரம் 07 இடங்கள் காலியிடங்கள் உள்ளன.
விண்ணப்பிக்கும் முறை ஆஃப்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை விண்ணப்பத்தாரர்கள் எழுத்துத் தேர்வு, வர்த்தகம் / திறன் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

வேலைக்கு விண்ணப்பிப்பது எப்படி?

விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பை படித்த பிறகு அறிவிப்பின் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து அதை கீழே உள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:

தளபதியின் முடிவு, கடலோர காவல்படை மண்டலம் (மேற்கு), வோர்லி கடல் முகப்பு அஞ்சல் வோர்லி காலனி, மும்பை – 400 030

அதிகாரபூர்வ இணையதள முகவரி தெரிந்து கொள்ளுங்கள்

https://www.indiancoastguard.gov.in

இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

அதிகாரபூர்வ அறிவிப்பை தெரிந்து கொள்ளுங்கள்

https://www.indiancoastguard.gov.in/WriteReadData/Orders/202205310527349841332AdvtMaterial-VY-21forCGwebsite-converted.pdf

இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரையிலான செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.



Source link

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube