திருச்சிற்றம்பலம் பிரியா பவானி சங்கர் கேரக்டரில் தனுஷ் நடிக்கிறார் – தமிழ் செய்திகள்


பிரியா பவானி சங்கர் கிராமத்து தென்றல் கேரக்டரில் நடித்து வருவதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தனுஷ் நடிப்பில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘திருச்சிற்றம்பலம்’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது இந்த படம் அடுத்த மாதம் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

priyabhavani10062022m1

இந்த நிலையில் இந்த படத்தில் நடித்த நடிகை நடிகர்களின் கேரக்டர் குறித்து அறிவிப்பு வெளியாகி வருகிறது. முதல் கட்டமாக ராஷி கண்ணா, அனுஷா என்ற கேரக்டரில் நடித்து வருவதாகவும் அவர் தனுஷின் பள்ளிகால தோழி கேரக்டரில் நடிப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து பிரியா பவானி சங்கர் கிராமத்து தென்றலாக ‘ரஞ்சனி’ என்ற கேரக்டரில் நடித்திருப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளது. மேலும் இதுகுறித்து சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் டுவிட்டர் பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

thiruchitrambalam 1422022

தனுஷ், ராஷிகண்ணா, ப்ரியா பவானிசங்கர், நித்யாமேனன், பிரகாஷ்ராஜ், பாரதிராஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தத் திரைப்படத்தை ரெட் ஜெயிண்ட் திரைப்படம் தமிழகத்தில் வெளியிடுவது குறிப்பிடத்தக்கது.





Source link

Please follow and like us:
icon Follow en US
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube