துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் போன்ற படங்களை தொடர்ந்து தனுஷ் செல்வராகவன் கூட்டணியில் நானே வருவேன் திரைப்படம் உருவாகி வருகிறது.
கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் அந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் தயாரிப்பாளர் தாணு படத்திற்கான வியாபார பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளார் என சினிமா துறையில் கூறுகின்றனர்.
அதில் முதல்கட்டமாக திரையரங்கு வெளியீட்டிற்கு பிறகான டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமையை அமேசான் நிறுவனம் விற்பனை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்… ‘நாயகன் மீண்டும் வர்றார்!’ – கமல் ஹாசனின் நடிப்பில் நாம் கொண்டாடிய ஆக்ஷன் படங்கள்!
அதிலும் 24 கோடி ரூபாய் அளவிற்கு வியாபாரம் நடந்து வருவதாக சினிமா துறையினர் தெரிவிக்கின்றனர். இதற்கு முன் தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தாணு தயாரித்த கர்ணன் திரைப்படத்தின் ஓ.டி.டி உரிமை 9 கோடி ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளது. இந்த நிலையில் நானே வருவேன் படத்தின் ஓ.டி.டி உரிமை இரண்டு மடங்கு அதிகரித்துள்ளதாக கூறுகின்றனர்.
@ Google செய்திகளைப் பின்தொடரவும்: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரையிலான செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.