துருவ் விக்ரம் இயக்கி, நடித்து, பாடியுள்ள மனசே மியூசிக் வீடியோ! துருவ் விக்ரமின் மனசே இசை வீடியோ வெளியிடப்பட்டது – நியூஸ்18 தமிழ்


நடிகர் துருவ் விக்ரம் தனது முதல் இசை ஆல்பத்தை வெளியிட்டுள்ளார்.

நடிகர் துருவ் விக்ரம், இறுதி இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் ‘மஹான்’ படத்தில் விக்ரம் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இதற்கிடையே கடந்த மாதம் தனது சொந்த யூடியூப் சேனலைத் தொடங்கிய அவர், சுயாதீன இசையில் தான் ஆர்வம் தெரிவித்திருந்தார்.

அதோடு, இது குறித்த வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார் துருவ். அதில், நான் அடிக்கடி என் எண்ணங்களில் தொலைந்து போவேன். ஆனால் வகுப்புக்கு சென்ற எதிலும் ஆர்வமாக இருந்ததாக உணரவில்லை. அதற்கு பதிலாக நான் திரைப்படங்களைப் பார்ப்பேன், எனது கேமராவை எடுத்துக்கொண்டு தெருக்களில் சுற்றித் திரிவேன். கீபோர்டில் சீரற்ற டியூன்களை வாசிப்பேன், குளிக்கும் போது என் சொந்த டியூன்களைப் பாடுவேன். நான் தனியாக இருக்கும்போது என் கற்பனையில் கதாபாத்திரங்களையும் காட்சிகளையும் உருவாக்குவேன். என் இதயம் சொல்ல விரும்பும் கதைகள், பாடல்கள், என் யூடியூப் சேனலில் சொல்ல விரும்புகிறேன், எனத் தெரிவித்திருந்தார்.

தனுஷின் கேப்டன் மில்லர் பூஜை படங்கள்!

@ Google செய்திகளைப் பின்தொடரவும்: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்நிலையில் தற்போது மனசே என்ற அவரது முதல் ஆல்பம் பாடல் வெளியாகியுள்ளது. இந்த மியூசிக் வீடியோவை தயாரித்து, இயக்கி, பாடல் எழுதி, பாடியிருக்கிறார் துருவ். பாடலுக்கு இசை உஜ்வால் குப்தா. இந்தப் பாடலுக்கு கமெண்ட் செக்ஷனில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் ரசிகர்கள்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:



Source link

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube