பிரபல இயக்குனர் மிஷ்கின் நடிப்பில் இருந்து கிடைக்கும் பணத்தை தனியாக தனது மகளுக்காக சேமித்து வைத்திருப்பதாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான மிஷ்கின் ‘சித்திரம் பேசுதடி’ என்ற படத்தின் மூலம் இயக்குனரானார். அதன் பிறகு ‘அஞ்சாதே’, ‘நந்தலாலா’, ‘துப்பறிவாளன்’ உள்ளிட்ட பல படங்களை இயக்கினார் என்பதும் ஒருசில படங்களில் நடித்துள்ளார் என்பதும் தெரிந்ததே. தற்போது ‘பிசாசு 2’ படத்தை இயக்குனர் மிஷ்கின் இயக்கி முடித்துள்ளார் என்பதும் இந்த படம் விரைவில் ரிலீசாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் நடிப்பது குறித்து கூறிய மிஷ்கின், ‘பலர் தன்னிடம் விரும்பி நடிக்க வேண்டும் என்று கேட்டதாகவும், நடிப்பதற்கு அதிக பணம் தருவதாக கூறியதால் மறுக்க முடியவில்லை என்றும் கூறினார். ஆனால் அதே நேரத்தில் ஒரு படத்தை இயக்கும் போது நடிக்க மாட்டேன் என்றும் இயக்கி முடித்து அடுத்த படத்தை ஆரம்பிக்கும் வரை மட்டுமே நடிக்க வரும் வாய்ப்பை ஏற்றுக் கொள்வேன் என்றும் கூறியுள்ளார்.
நடிப்பதால் கிடைக்கும் பணத்தை தனியாக சேமித்து வைத்திருக்கிறேன் என்றும் அது என் மகளின் திருமணத்திற்காக சேர்த்து வைத்து இருக்கிறேன் என்றும் அவர் உருக்கமுடன் கூறியுள்ளார். மேலும் காதலித்து திருமணம் செய்து கொண்ட இயக்குனர் மிஷ்கின்திருமணத்திற்கு பின் மகள் பிறந்த சில நாட்களிலேயே மனைவியை பிரிந்து விட்டதாகவும், நாங்கள் பிரிவதற்கு நான்தான் முழுக்க முழுக்க முழுக்க முழுக்க காரணம் என்றும், என் மனைவி தற்போது தனது மகளை நன்றாக பார்த்துக் கொள்கிறார் என்றும் என்னை நேசித்துக் கொண்டே இருக்கிறார் என்றும் கேள்வி எழுப்பப்பட்டேன் என்றும் அந்த பேட்டியில் எமோஷனலாக கூறியுள்ளார்.