Bowl Method Diet பற்றி தெரியுமா..? உடல் எடையை வேகமாக குறைக்க இப்போ இதுதான் டிரெண்ட்..!


உடல் எடையை குறைத்து, பார்ப்பதற்கு ஒல்லியான தோற்றத்தில் அழகாக தெரிய வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் இருக்கும். இதற்காக பலரும் பல விதமான முயற்சிகளை மேற்கொள்வார்கள். உடலில் கூடுதலாக உள்ள சதையை குறைக்க வேண்டும் என்று நீங்களும் கூட தினசரி ஜிம் சென்று பயிற்சி செய்து கொண்டிருப்பீர்கள். ஆனால், உடலில் சிக்ஸ் பேக் அமைய வேண்டும் என்றால், அதற்கான மந்திரம் ஜிம்மில் மட்டும் கிடையாது; சமையல் அறையிலும் உண்டு என்ற பொன்மொழியை நீங்கள் கேள்விபட்டது உண்டா?

ஆம், உணவுக் கட்டுப்பாட்டில் எந்த திட்டமிடலும் இன்றி, சாதாரண உடற்பயிற்சி செய்வதால் மட்டும் பலனும் ஏற்பட்டு விடாது. உடல் எடையை குறைக்க வேண்டும் என்றால் உணவுக் கட்டுப்பாடு விஷயத்திலும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

நீங்கள் ஆரோக்கியமான உணவை சாப்பிடுகிறீர்கள் என்று வைத்துக் கொண்டாலும் கூட, அதை அப்படியே பெரிய அளவில் எடுத்துக் கொள்ளலாம் என்றால் அர்த்தம் அல்ல. ஆகவே, உணவின் தரத்திற்கு எந்த அளவு முக்கியம் கொடுக்கிறீர்களோ, அதே அளவு உணவு எவ்வளவு எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

கின்னத்தில் எடுத்து சாப்பிடலாம் :

உணவின் அளவைக் கணக்கீடு செய்வதற்கு கின்னம் ஒன்றை தினசரி நீங்கள் பயன்படுத்தலாம். நீங்கள் எவ்வளவு கலோரிகளை எடுத்துக்கொள்கிறீர்கள் என்பதை கணக்கிடுவதற்கு இது உதவிகரமாக இருக்கும். இதை கடைப்பிடிப்பது மிகவும் எளிமையானது.

நீங்கள் தினமும் சரியான நேரத்தில் தூங்கி எழுந்தாலே உடல் எடையை குறைக்கலாமா..?

எப்படி கடைப்பிடிக்கலாம்?

* நீங்கள் சாப்பிடுவதற்கு 3 சிறிய கின்னங்களை எடுத்துக் கொள்ளுங்கள்.
* உங்களுக்கு பிடித்தமான உணவை எடுத்து, ஒவ்வொரு கின்னத்தின் வரம்பு வரை நிரப்புங்கள்.
* 3 கின்னத்தில் உள்ள உணவை சாப்பிட்டு முடித்த பிறகு, கூடுதலாக உணவு எதுவும் எடுத்துக்கொள்ளக் கூடாது.
*ஒருவேளை நீங்கள் வயிறு நிரம்ப சாப்பிட்ட உணர்வு ஏற்பட்டால், அடுத்த முறை கின்னத்தின் எண்ணிக்கையை 2ஆக குறைத்து விடுங்கள்.

food 1

* தினசரி 3 வேளை உணவுக்கும் இதே முறையை பின்பற்றவும். சாப்பிடுவதற்கு முன்பாக ஒரு கிளாஸ் அளவு தண்ணீர் குடித்தால் பசி கட்டுப்படுத்தப்படும். உடலுக்கு போதுமான நீர்ச்சத்தும் கிடைக்கும்.
* உண்ணும் உணவை மெதுவாக ரசித்து, ருசித்து மென்று சாப்பிடவும். இதனால், அதிகம் சாப்பிட வேண்டும் என்ற உணர்வு கட்டுப்படுத்தப்படுகிறது. அதே சமயம், உணவின் செரிமானத்திற்கும் உதவியாக இருக்கும்.

உணவில் கட்டுப்பாடு கொண்டு வரும் அதே சமயம், எப்போதும் போல உடற்பயிற்சிகளை தொடர்ந்து செய்து வரவும். சாப்பிட்ட உணவு போதாமல், பசி எடுத்தால் அவ்வபோது தண்ணீர் அருந்தவும். இது உங்கள் பசி உணர்வை கட்டுப்படுத்தும்.

இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரையிலான செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.



Source link

Please follow and like us:
icon Follow en US
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube