விவசாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்திய சிவன்மலை ஆண்டவர்..உத்தரவுப்பெட்டியில் என்ன பொருள் தெரியுமா? | Millets in the Sivanmalai Aandavar Utharavupetti


Spirtuality

oi-Jeyalakshmi C

திருப்பூர்: விவசாயிகள் மகிழ்ச்சியடையும் வகையிலான பொருள் வைத்து பூஜை செய்ய சிவன்மலை ஆண்டவர் உத்தரவு கொடுத்துள்ளார். இந்த ஆண்டு நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்கும் என்று பக்தர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே சிவன் மலையில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. சித்தர்களில் ஒருவரான சிவவாக்கியர் இங்கு தவம் செய்துள்ளார். இவர் இங்குள்ள முருகப்பெருமானை தரிசனம் செய்து விட்டு இங்குள்ள சுரங்கப்பாதை வழியாக பழனி சென்றார் என கூறப்படுகிறது.

சென்னையில் ஹீட்..5 ஊர்களில் பட்டையை கிளப்பப்போகும் மழை.. வானிலை அறிவிப்பு சென்னையில் ஹீட்..5 ஊர்களில் பட்டையை கிளப்பப்போகும் மழை.. வானிலை அறிவிப்பு

முசுகுந்தன் என்ற அரசன் தீராத நோயால் அவதிப்பட்டார். இதற்கு பல மருந்துகள் உட்கொண்டும் பலன் கிடைக்கவில்லை. அதனால் கௌதமகரிஷி முனிவரிடம் சென்ற முசுகுந்தன், தன் உடல் உபாதையை தீர்க்கும்படி வேண்டினார். “சிவன்மலை முருகனை வணங்கினால் உன் வியாதி நீங்கும்.” என்றார் கௌதமகரிஷி. முனிவர் கூறியது போல் முசுகுந்தன் சிவன்மலை முருகனை தரிசித்து பின் முசுகுந்தனை வதைத்த நோய் விலகியது.

சிவன்மலை ஆண்டவர்

சிவன்மலை ஆண்டவர்

சிவன்மலை ஆண்டவர் கோவில் முருகப் பெருமானே பக்தர்களின் கனவில் தோன்றி குறிப்பிட்ட பொருளை சுட்டிக் காட்டி அதை உத்தரவு பெட்டியில் வைக்க ஆணையிடுவார். அவ்வாறு உத்தரவு பெற்ற பக்தர் கோயில் நிர்வாகத்தை அணுகி விபரத்தை கூறினால் மூலவர் முன்பு பூப்போட்டு உத்தரவு கேட்டு அதன் பின்னர் அந்தப் பொருள் பெட்டியில் வைக்கப்படுவது வழக்கம். இவ்வாறு உத்தரவு பெட்டியில் வைக்கப்படும் பொருளுக்கு கால நிர்ணயம் ஏதும் கிடையாது.

பக்தர்களின் நம்பிக்கை

பக்தர்களின் நம்பிக்கை

அடுத்தொரு பொருள் பக்தரின் கனவில் உத்தரவாகும் வரை பெட்டியில் வைக்கப்பட்டு பூஜிக்கப்படும். இவ்வாறு பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும் பொருள் எதாவது ஒரு வகையில் சமுதாயத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். அது நேர்மறை யானதாகவும் இருக்கலாம். எதிர்மறையானதாகவும் இருக்கலாம். ஆண்டவன் உத்தரவுப் பெட்டிக்குள் வைக்கப்படும் பொருள், தேசிய அளவில் முக்கியத்துவம் பெறும் என்பது இப்பகுதிகளில் உள்ள பக்தர்களின் நம்பிக்கை. இதன் காரணமாகவே இந்தக் கண்ணாடிப் பெட்டிக்குள் வைக்கப்பட்டிருக்கும் பொருளை இப்பகுதி மக்கள் கவனித்து வருகின்றனர்.

 பூமியில் தாக்கம்

பூமியில் தாக்கம்

சிவன்மலை ஆண்டவன் உத்தரவுபெட்டியில் இதற்கு முன்பு ஏர் கலப்பை, தங்கம், ரூபாய் நோட்டு, துப்பாக்கி, மண், ஆற்று மணல், தண்ணீர், உப்பு, பூமாலை, துளசி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட பொருட்கள் வைத்து பூஜை செய்யப்பட்டுள்ளது. துப்பாக்கி தோட்டாக்கள் வைத்து பூஜை செய்த போது இந்தியா பாகிஸ்தான் போர் ஏற்பட்டது. மண் வைத்து பூஜை செய்த போது ரியல் எஸ்டேட் தொழில் சிறப்படைந்தது. மற்றொரு முறை மண் வைத்து வழிபட்ட போது குஜராத்தில் நில நடுக்கம் ஏற்பட்டு பேரழிவு உருவானது.

விலை உயர்ந்த மஞ்சள், பஞ்சு

விலை உயர்ந்த மஞ்சள், பஞ்சு

மஞ்சள் வைத்து பூஜை செய்த போது தங்கம் போல மஞ்சள் விலை உயர்ந்தது. தண்ணீர் வைத்து பூஜை செய்த போது சுனாமி ஏற்பட்டது. பின்னர் ஒருமுறை நீர் வைத்து வழிபட்டபோதுதான் கேதார்நாத்தில் வெள்ளம் ஏற்பட்டது. பஞ்சு வைத்து பூஜை செய்யப்பட்டதால் பருத்தி பஞ்சு விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. கடந்த மார்ச் 21ஆம் தேதியன்று திருப்பூர் நாச்சிபாளையம் பகுதியை சேர்ந்த பானுமதி என்ற பக்தரின் கனவில் தோன்றியதாக கூறி, நேற்று இலவம் பஞ்சு, பருத்தி பஞ்சு, எதிர்காலத்தை கணிக்க பயன்படுத்தும் சோளி ஆகியன வைத்து வழிபாடு நடைபெற்றது.

எலுமிச்சை

எலுமிச்சை

ஏப்ரல் மாதம் 1 ஆம் தேதி முதல் கடலூர் பகுதியைச் சேர்ந்த கபில்தேவ் என்ற பக்தரின் கனவில் உத்தரவான ஸ்ரீபோகரின் திருவுருவப்படம் வைத்து பூஜிக்கப்பட்டு வந்தது. 2நாட்கள் மட்டுமே பூஜிக்கப்பட்ட நிலையில் கோவை, பெரியநாயக்கன் பாளையத்தை சேர்ந்த காமராஜ் என்ற பக்தரின் கனவில் உத்தரவான 3கிலோ விபூதி மற்றும் 7எலுமிச்சை பழங்கள் வைத்து ஏப்ரல் 4 ஆம் தேதி முதல் பூஜிக்கப்பட்டு வந்தது.

நிறைபடி கம்பு

நிறைபடி கம்பு

இந்த நிலையில் இன்று பக்தர் ஒருவரின் கனவில் உத்தரவான நிறைபடி கம்பு வைத்து பூஜை செய்யப்படுகிறது. இது போல் இதற்கு முன்பாக தானியங்கள் வைத்து பூஜை செய்தபோது அதன் விளைச்சல் உயர்வு மற்றும் விலை உயர்வும் ஏற்பட்டுள்ளது. தற்போது கம்பு வைத்து பூஜை செய்வது மானாவாரி நிலங்களில் அதிக அளவில் இந்த ஆண்டு சாகுபடி பணிகள் நடைபெறலாம். அதன் மூலம் உணவு தானிய பயிர் விளைச்சல் அதிகரிக்கலாம் என்பதை சிவன்மலை ஆண்டவன் உணர்த்துவதாக பக்தர்கள் தெரிவித்துள்ளனர்.

English summary

Sivanmalai aandavar Uthavar petti: (சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப்பெட்டி) The Lord of Sivanmalai has instructed the farmers to perform puja with a material that makes them happy. Devotees are hopeful that this year will bring good rains and agriculture will flourish.

Story first published: Wednesday, June 8, 2022, 16:20 [IST]

Source link

Please follow and like us:
icon Follow en US
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube