ஏக்கத்தை தீர்த்த ஃபோக்ஸ்வேகன்… ஐடி.4 இவி எலெக்ட்ரிக் காரின் இந்திய வருகை உறுதியானது… எப்போ வர போகுது தெரியுமா?

மிக சமீபத்தில் ஸ்கோடா (Skoda) நிறுவனம் அதன் என்யாக் ஐவி (Enyaq iV) எலெக்ட்ரிக் எஸ்யூவி ரக காரை இந்தியாவில் விரைவில் விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டது. இந்த நிறுவனத்தின் அறிவிப்பைத் தொடர்ந்து தற்போது ஃபோக்ஸ்வேகன் (Volkswagen) நிறுவனம் அதன் மின்சார காரை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த இருப்பதாக தகவல் வெளியிட்டிருந்தது.

ஏக்கத்தை தீர்த்த ஃபோக்ஸ்வேகன்... ஐடி.4 இவி எலெக்ட்ரிக் காரின் இந்திய வருகை உறுதியானது... எப்போ வர போகுது தெரியுமா?

நிறுவனத்தின் புகழ்மிக்க எலெக்ட்ரிக் கார் மாடலான ஐடி.4 (ID.4 EV) வாகனத்தையே இந்திய மின் வாகன சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கின்றது. இது ஓர் எஸ்யூவி ரக எலெக்ட்ரிக் கார் ஆகும். இந்த வாகனத்தை தனது மாடுலர் எம்இபி ஆர்கிடெக்சரை தழுவியே ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் உருவாக்கியிருக்கின்றது. இதே பிளாட்பாரத்தை பயன்படுத்தியே ஸ்கோடா என்யாக் ஐவி எலெக்ட்ரிக் எஸ்யூவி-யும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஏக்கத்தை தீர்த்த ஃபோக்ஸ்வேகன்... ஐடி.4 இவி எலெக்ட்ரிக் காரின் இந்திய வருகை உறுதியானது... எப்போ வர போகுது தெரியுமா?

ஆகையால், முக்கியமான சிறப்பம்சங்கள் விஷயத்தில் இரு கார் மாடல்களும் ஒரே மாதிரியானதாக இருக்கும் என்பது தெளிவாக தெரிகின்றது. ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் ஐடி.4 மின்சார காரை அடுத்த ஆண்டில் அறிமுகம் செய்ய இருக்கின்றது. ஆகையால், 2023 ஆகஸ்டு மாதத்திற்குள் இந்த எலெக்ட்ரிக் காரை இந்திய சாலைகள் பார்க்க முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஏக்கத்தை தீர்த்த ஃபோக்ஸ்வேகன்... ஐடி.4 இவி எலெக்ட்ரிக் காரின் இந்திய வருகை உறுதியானது... எப்போ வர போகுது தெரியுமா?

இந்த வாகனம் ஓர் முழுமையான சார்ஜில் 480 கிமீ ரேஞ்ஜை தரக் கூடியது. சிபியூ வாயிலாகவே எலெக்ட்ரிக் காரை நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. அதாவது, கியா நிறுவனத்தின் இவி6 எலெக்ட்ரிக் காரை போல் புக்கிங்குகளுக்கு ஏற்ப அவ்வப்போது 100 யூனிட்டுகள், 200 யூனிட்டுகள் என பேட்ச் பேட்சாக விற்பனைக்குக் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஏக்கத்தை தீர்த்த ஃபோக்ஸ்வேகன்... ஐடி.4 இவி எலெக்ட்ரிக் காரின் இந்திய வருகை உறுதியானது... எப்போ வர போகுது தெரியுமா?

ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் இப்போதே குறிப்பிட்ட சில மாடல்களின் உற்பத்தியை உள்ளூர் மயமாக்கி அவற்றை விற்பனைச் செய்ய தொடங்கியிருக்கின்றது. அந்தவகையில், நேற்றைய தினம் இந்தியா 2.0 திட்டத்தின்கீழ் உள்ளூர் உற்பத்தி மயமாக்கப்பட்ட விர்டுஸ் காம்பேக்ட் செடான் ரக காரை நாட்டில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது.

ஏக்கத்தை தீர்த்த ஃபோக்ஸ்வேகன்... ஐடி.4 இவி எலெக்ட்ரிக் காரின் இந்திய வருகை உறுதியானது... எப்போ வர போகுது தெரியுமா?

இந்த மாதிரியான சூழலில் இந்நிறுவனம் ஐடி.4 எலெக்ட்ரிக் காரின் உற்பத்தியை இந்தியாவில் தொடங்குவதற்கு இப்போதைக்கு சாத்தியம் இல்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேவேலையில், மின்சார காருக்கு டிமாண்ட் பல மடங்கு அதிகரிக்கும் எனில் நிறுவனம் உற்பத்தி பணிகளை உடனுக்குடன் கையில் எடுக்கும் என்று கூறப்படுகின்றது.

ஏக்கத்தை தீர்த்த ஃபோக்ஸ்வேகன்... ஐடி.4 இவி எலெக்ட்ரிக் காரின் இந்திய வருகை உறுதியானது... எப்போ வர போகுது தெரியுமா?

ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் இந்த மின்சார காரை அட்டகாசமான மற்றும் மிகுந்த கவர்ச்சியான தோற்றத்தில் உருவாக்கியிருக்கின்றது. இதற்காக வளைவு-நெளிவுகள் நிறைந்த பேனல்களை அது பயன்படுத்தியிருக்கின்றது. இதுமட்டுமின்றி, கண்களைக் கவரக் கூடிய க்ரில், எல்இடி ஹெட்லேம்ப், இரு ஹெட்லேம்ப் மற்றும் லோகோவையும் இணைக்கின்ற வகையில் மெல்லிய இழை போன்ற லைட் உள்ளிட்டவையும் ஐடி.4 இல் பயன்படுத்தப்பட்டுள்ளன.

ஏக்கத்தை தீர்த்த ஃபோக்ஸ்வேகன்... ஐடி.4 இவி எலெக்ட்ரிக் காரின் இந்திய வருகை உறுதியானது... எப்போ வர போகுது தெரியுமா?

இவையே வாகனத்திற்கு அதிக கவர்ச்சியைச் சேர்க்கும் வகையில் உள்ளது. இதுபோன்று இன்னும் பல சிறப்பு விஷயங்கள் அக்காரில் சேர்க்கப்பட்டுள்ளன. பம்பரில் மேட் பிளாக் நிறத்திலான இன்செர்டுகள், 21 அங்குல ட்யூவல் டோன் டைமண்ட் கட் அலாய் வீல்கள், லோ-புரஃபைல் டயர்கள், பியானோ பிளாக் நிறத்திலான ரூஃப் மற்றும் பில்லர்கள் உள்ளிட்டவை கூடுதல் கவர்ச்சியம்சமாக ஐடி.4 இல் சேர்க்கப்பட்டுள்ளது.

ஏக்கத்தை தீர்த்த ஃபோக்ஸ்வேகன்... ஐடி.4 இவி எலெக்ட்ரிக் காரின் இந்திய வருகை உறுதியானது... எப்போ வர போகுது தெரியுமா?

இதேபோல் காருக்குள்ளும் அதிக சிறப்பம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஹெட்ஸ் அப் திரை, இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் போன்ற தொழில்நுட்பங்களால் நிரப்பப்பட்டிருக்கின்றது. மேலும், இந்த காரை அதிக தூரம் பயணிக்கும் வாகனமாக மாற்றுவதற்காக 77 kWh பேட்டரி பேக்கை அது பயன்படுத்தியிருக்கின்றது. மோட்டாரை பொருத்தவரை இரு விதமான தேர்வுகளில் ஐடி.4 கிடைக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏக்கத்தை தீர்த்த ஃபோக்ஸ்வேகன்... ஐடி.4 இவி எலெக்ட்ரிக் காரின் இந்திய வருகை உறுதியானது... எப்போ வர போகுது தெரியுமா?

ஒற்றை மோட்டார் 2 வில் டிரைவ் சிஸ்டம் மற்றும் இரட்டை மோட்டார் அனைத்து வீல் இயக்கம் என்கிற தேர்விலேயே அது கிடைக்க இருக்கின்றது. இதில், ஒற்றை மோட்டார் தேர்வில் கிடைக்கும் ஐடி.4 அதிகபட்சமாக 520 கிமீ ரேஞ்ஜ் மற்றும் 204 எச்பி பவரை வெளிப்படுத்தும். இரட்டை மோட்டார் தேர்வில் கிடைக்கும் ஐடி.4 அதிகபட்சமாக 480 கிமீ ரேஞ்ஜ், 299 எச்பி பவரை வெளிப்படுத்தும். இதுமாதிரியான சூப்பரான் திறன்களுடனேயே ஃபோக்ஸ்வேகன் ஐடி.4 எலெக்ட்ரிக் கார் விரைவில் இந்திய சந்தையை அலங்கரிக்க இருக்கின்றது.

Source link

Please follow and like us:
icon Follow en US
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube