காருக்கு வீல் அலைன்மெண்ட் செய்வது தண்ட செலவு அல்ல… மற்ற செலவுகளை குறைக்கும் டெக்னிக்… ஏன் தெரியுமா?

கார்களை பயன்படுத்துபவர்களுக்கு வீல் அலைன்மெண்ட் பற்றி கட்டாயம் தெரிந்திருக்கும். ஒரு காருக்கு வீல் அலைன்மெண்ட் என்பது எவ்வளவு முக்கியம்? சரியான அலைன் செய்யப்படாத வீல்களால் எவ்வளவு பிரச்சனைகள் ஏற்படும்? இதனால் காருக்கும் ஏற்படும் பாதிப்புகள் என்ன? எவ்வளவு காலத்திற்கு ஒரு முறை வீல் அலைன்மெண்ட் செய்ய வேண்டும் என காணலாம் வாருங்கள்.

காருக்கு வீல் அலைன்மெண்ட் செய்வது தண்ட செலவு அல்ல . . . மற்ற செலவுகளை குறைக்கும் டெக்னிக் . . . ஏன் தெரியுமா ?

கார்கள் தயாரிக்கும் போது தயாரிப்பு ஆலைகளில் கார்களின் வீல்கள் 4 புறம் ஒரே மாதிரியாக இருக்கும் வகையில் செட் செய்யப்பட்டு தயாரிக்கப்படும். இப்படியாக செட் செய்யப்பட்ட வீலின் அலைன்மெண்ட் நாம் கார்களை பயன்படுத்த பயன்படுத்த மாறுபட்டுக்கொண்டே இருக்கும். இப்படியாக மாறும்போது வாகனத்தின் பெர்பாமென்ஸ், செயல் திறன், மைலேஜ், டிரைவிங் எக்ஸ்பிரியன்ஸ் போன்ற விஷயங்கள் பாதிக்கப்படும். இதனால் நீங்கள் அவ்வப்போது உங்கள் காருக்கான வீல் அலைன்மெண்ட்டை செக் செய்து கொள்ளவேண்டியது அவசியமாகிறது.

காருக்கு வீல் அலைன்மெண்ட் செய்வது தண்ட செலவு அல்ல . . . மற்ற செலவுகளை குறைக்கும் டெக்னிக் . . . ஏன் தெரியுமா ?

முதலில் எந்தெந்த காரணங்களுக்காக வாகனங்களின் வீல் அலைன்மெண்ட் மாறுபடுகிறது பார்க்கலாம். பொதுவாக வாகனம் இயங்கினாலேயே வீல் அலைன்மெண்ட் மாறுபட துவங்கிவிடும் என சொல்லலாம். ஆனால் சாதாரணமாக இயங்கினால் மிக நுண்ணிய அளவிலான மாறுபாடு மட்டுமே இருக்கும். ஆனால் கரடுமுரடான பாதைகள், அதிகமான எடையுடன் பயணித்தல், அதிகமான திருப்பங்கள் நிறைந்த பாதைகளில் பயணித்தல் போன்றவற்றால் வீல் அலைன்மெண்ட் மாறுபடும்.

காருக்கு வீல் அலைன்மெண்ட் செய்வது தண்ட செலவு அல்ல . . . மற்ற செலவுகளை குறைக்கும் டெக்னிக் . . . ஏன் தெரியுமா ?

பொதுவாக வாகனத்தின் வீல் நேரடியாக சஸ்பென்சருடன் இணைக்கப்பட்டிருக்கும். சாலைகளில் கரடு முரடான பாதைகளில் செல்லும் அதிர்வுகளை தாங்கிக்கொள்ள இந்த சஸ்பென்சர்கள் பயன்படுகிறது. இப்படியாக நேரடியங்களில் சஸ்பென்சர்களுக்கும் கரடு முரடான பாதைகளுக்கு இடையில் சிக்கி தவிப்பது வீல்கள் தான். வேகமாக செல்லும் போது பாதையில் உள்ள மேடு பள்ளங்களில் வீல் அடிபடுவதால் அது தனது ஒரிஜினல் போசிஷனிலிருந்து மாறுபடுகிறது. இது கரடுமுரடான பாதைகளில் மட்டுமல்ல நல்ல ரோட்டில் பயணம் செய்து கொண்டிருக்கும் போது பெரிய குழியில் வீழ் விழுந்தாலும் அலைன்மெண்ட் மாறுபட வாய்ப்புள்ளது.

காருக்கு வீல் அலைன்மெண்ட் செய்வது தண்ட செலவு அல்ல . . . மற்ற செலவுகளை குறைக்கும் டெக்னிக் . . . ஏன் தெரியுமா ?

ஒவ்வொரு முறையும் சிறிது சிறிதாக மாற்றம் ஏற்படும் பட்சத்தில் சில காலம் இப்படியான தொடர் மாற்றங்கள் வீலின் அலைன்மெண்ட்டை மாற்றிவிடும். ஆகையில் இது நீங்கள் வாகனத்தை பயன்படுத்தும் முறையை பொருத்தும் வாகனத்தின் வகையை பொருத்தும் மாறுபடுகிறது. சிலர் வாகனங்களை அதிகமாக கரடுமுரடான சாலைகளில் பயன்படுத்தினால் அவர்களுக்கு விரைவிலே வீலின் அலைன்மெண்ட் மாறுபடும். அதுவே அவர்கள் ஆஃப்ரோடு வாகனத்தை பயன்படுத்தும் போது அவ்வளவு எளிதாக வீல் அலைன்மெண்ட் மாறுபடாது.

காருக்கு வீல் அலைன்மெண்ட் செய்வது தண்ட செலவு அல்ல . . . மற்ற செலவுகளை குறைக்கும் டெக்னிக் . . . ஏன் தெரியுமா ?

ஆஃப்ரோடு வாகனங்கள் அதற்கு தகுந்தார் போல டிசைன் செய்யப்பட்டிருக்கும். அதே போல நல்ல ரோட்டில் செல்லும் போது ஏதாவது பெரிய குழியில் காரின் வீல் இறங்கிவிட்டாலும் வீல் அலைன்மெண்ட் மாறுபட வாய்ப்பு இருக்கிறது. இதே போல வேகமாக சென்று திருப்பங்களில் காரை திருப்புவது, விபத்து நடந்த பின்பு சோதனை செய்யாமல் வாகனத்தை பயன்படுத்துவது, போன்ற நேரங்களில் அதிகம் மாறும்படும். இனி இப்படி வீல் அலைன்மெண்ட் மாறுபட்டதை எப்படி கண்டுபிடிப்பது அதற்கு என்ன செய்ய வேண்டும்?

காருக்கு வீல் அலைன்மெண்ட் செய்வது தண்ட செலவு அல்ல . . . மற்ற செலவுகளை குறைக்கும் டெக்னிக் . . . ஏன் தெரியுமா ?

பொதுவாக வீல் அலைன்மெண்ட் மாறிவருகிறது என்பதற்கான முதல் அறிகுறி காருக்கும் வழக்கத்திற்குமாறாக அதிர்வுகள் இருக்கும். திடீரென காரை ஓட்டிச்செல்லும் போது அதிர்வுகள் அதிகமாக இருந்தால் வீல் அலைன்மெண்ட் முக்கிமான காரணமாக இருக்கலாம். அடுத்தது காரை சாலைகளில் ஓட்டிச்செல்லும் போது கார் ஒர பக்கமாக இழுப்பது போல இருக்கும். இப்படியாக கார் ஒரு புறமாக சென்றால் அதற்கும் வீல் அலைன்மெண்ட் முக்கியமான காரணமாக இருக்கும்.

காருக்கு வீல் அலைன்மெண்ட் செய்வது தண்ட செலவு அல்ல . . . மற்ற செலவுகளை குறைக்கும் டெக்னிக் . . . ஏன் தெரியுமா ?

அடுத்தது கார் சாலையில் செல்லும் போது உங்கள் காரின் ஸ்டியரிங் வீலை நீங்கள் நேராக பிடித்திருந்தாலும் கார் நேராக செல்லாமல் சற்று வளைந்து வளந்து செல்வது காரின் வீல் அலைன்மெண்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை நமக்கு உணர்த்தும். நீங்கள் உங்கள் காரில் பயணிக்காமல் உங்கள் கார் ரோட்டில் செல்லும் போது வேறு ஒரு வாகனத்தில்நீங்கள் பயணித்தபடி உங்கள் வாகன வீலை பார்த்தால் அது சுற்றும் போது நேராக இல்லாமல் வளைந்த படி சுற்றினால் வீல் அலைன்மெண்டில் மாற்றம் உள்ளது என அர்த்தம்.

காருக்கு வீல் அலைன்மெண்ட் செய்வது தண்ட செலவு அல்ல . . . மற்ற செலவுகளை குறைக்கும் டெக்னிக் . . . ஏன் தெரியுமா ?

இப்படியாக உங்கள் வாகனத்தின் வீல் அலைன்மெண்ட் மாறியிருந்தால் நீங்கள் உடனடியாக அருகில் உள்ள சர்வீஸ் சென்டருக்கு சென்று வீல் அலைன்மெண்ட்டை சரி செய்து கொள்ள வேண்டும். இப்படியாக வீல்களை சரியான அலைன்மெண்டில் வைத்து நீங்கள் பயணித்தால் கார்களின் ஓட்டும் போது சாலைகளில் உறுதியாகவும் தடுமாற்றமின்றி நீங்கள் கையாள முடியும். சரியான வீல் அலைன்மெண்ட் இருந்தால் உங்கள் கார் டயரின் உழைப்பு அதிகரிப்பு, சரியான வீல் அலைன்மெண்ட் இருந்தால் உங்கள் காரின் சஸ்பென்சன் மற்றம் ஸ்டியரிங் பாகங்களின் உழைப்பு அதிகரிக்கும்.

காருக்கு வீல் அலைன்மெண்ட் செய்வது தண்ட செலவு அல்ல . . . மற்ற செலவுகளை குறைக்கும் டெக்னிக் . . . ஏன் தெரியுமா ?

இதுமட்டுமல்ல காரின் வீல் அலைன்மெண்ட் சரியில்லை என்றால் காரின் மைலேஜ் 7சதவீதம வரை சராசரியாக குறைவதாக ஆய்வறிக்கை ஒன்று கூறுகிறது. அப்படி என்றால் வீல் அலைன்மெண்ட்டை சரியாக வைத்திருந்தால் காரின் மைலேஜ் 7 சதவீதம் அதிகரிக்கும் பெட்ரோல் செலவுகள் குறைவும். அதே போல சரியான வீல் அலைன்மெண்டில் இருப்பதால் காரில் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள முடியும். மேலும் சரியான வீல் அலைன்மெண்ட் பிரேக்கிங் அனுபவத்தையும் சிறப்பாக வழங்கும்.

காருக்கு வீல் அலைன்மெண்ட் செய்வது தண்ட செலவு அல்ல . . . மற்ற செலவுகளை குறைக்கும் டெக்னிக் . . . ஏன் தெரியுமா ?

நீங்கள் கார் வாங்கியது முதல் நல்ல தரமான சாலைகளில் காரை பயன்படுத்தி வந்தாலும், காரை சிறப்பான முறையில் ஓட்டியும் பராமரித்தும் வந்தாலும் 2-3 ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது காரின் வீல் அலைன்மெண்ட்களை மாற்ற வேண்டும்.கரடு முரடான சாலைகள், குழிகளில் கார்களை இறக்குதல், போன்ற பயன்பாடு இருந்தால் வீல் அலைன்மெண்ட் மாறியதற்கான அறிகுறி தெரிந்தவுடன் செக் செய்து கொள்வது சிறந்தது.

Source link

Please follow and like us:
icon Follow en US
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube