புவி அறிவியலில் ஆய்வு செய்ய விருப்பமா? கட்டாயம் இதற்கு விண்ணப்பிங்க – News18 Tamil


இளநிலை ஆராய்ச்சி உதவித்தொகை இடங்களுக்கான (MRPF JRF/SRF) ஆட்சேர்ப்பு அறிவிப்பை புனேயில் இருந்து வரும் வெப்பமண்டலம் சார்ந்த வானிலைக்கான இந்திய நிறுவனம் (Indian Institute of Tropical Metrology) வெளியிட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இந்த ஆய்வு உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.

MRFP (JRF/SRF) என்பது புவி அறிவியல் அமைச்சகத்தின் பிரத்யேக ஆய்வு உதவித் தொகை திட்டமாகும். புவி அறிவியல் துறையில் ஆராய்ச்சியை அதிகரிப்பதற்காகவும், ஆய்வு மாணவர்களுக்கு பல நன்மைகளை அளிப்பதற்காகவும் இது செயல்படுத்தப்படுகிறது. இதற்கான ஆள்தேர்வு நடைமுறை தேசிய அளவில் நடத்தப்படுகிறது. வழிகாட்டுதலின் படி, தேர்ச்சி பெற்றவர்கள் முதல் நான்கு மாதங்கள், புனேயில் உள்ள நிறுவனத்தில் பணிப்பயிற்சித் திட்டத்தில் (இண்டக்ஷன் பயிற்சி) கலந்து கொள்ள வேண்டும். அதன் பின், தொடர்புடைய துறைகளில் பல்கலைக்கழகங்களில் பதிவு செய்து பிஎச்டி மேற்கொள்ள வேண்டும். முதல் இரண்டு ஆண்டுகள் இளநிலை ஆராய்ச்சி உதவித்தொகை, அடுத்த இரண்டு ஆண்டுகள் முதுநிலை ஆராய்ச்சி உதவித்தொகை வழங்கப்படும்.

காலியிடங்கள்: 19

பொது பிரிவினருக்கு 7 இடங்களும், பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு 1 இடமும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 7 இடங்களும், பட்டியல் கண்ட சாதிகள் மற்றும் பட்டியல் கண்ட பழங்குடியினர் பிரிவினருக்கு தலா இரண்டு இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

வயது வரம்பு: இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் , 27 ஜூன் 2022 அன்று 28 வயதுக்கு மேல் இருக்கக் கூடாது.

இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும்.

எனவே, நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் கண்ட சாதிகள்/ பட்டியல் கண்ட பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு பெற தகுதியுடையவர்கள். மூன்றாம் ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடையவர்கள். நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் 10 ஆண்டு வரை சலுகை பெற தகுதியுடைவராவர்.

இயற்பியல், வளிமண்டல அறிவியல், இயற்பியல் கடல்சார் அறிவியல், கடல்சார் அறிவியல், விண்வெளி அறிவியல், சுற்றுச்சூழல் அறிவியல் போன்ற பாடப்பிரிவுகளில் முதுநிலை பட்டம் பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். NET/GATE/LS ஆகிய தேர்வுகளில் தகுதி மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு, கல்வித் தகுதி, கட்டணம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை அடங்கும்.
மோஸ் நிறுவனங்களில் – PER/02/2022 ) தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன.

மதிப்பூதியம்: ரூ.31,000 + இதர படிகள்

இதற்கான, விண்ணப்பங்கள் சமர்பிப்பதற்குரிய கடைசி நாள் 2022 , ஜூன் 27 ஆகும்.

இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரையிலான செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.Source link

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube