பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் – News18 Tamil


இண்டிகோ ஏர்லைன்ஸ் உதவி மேலாளர் பதவி: உதவி மேலாளர் காலி பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

கல்வித் தகுதிகள்:

எலக்ட்ரிக்கல்/எலக்ட்ரானிக்ஸ்/மெக்கானிக்கல்/ஈரோநாட்டிகல் ஆகிய பாடப்பிரிவுகளில் பட்டம் பெற்ற பி.டெக் மாணவர்கள் (அல்லது) விமான பராமரிப்பு பொறியியல் (விமான பராமரிப்பு பொறியியல்) துறையில் பட்டம் பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

10,+2ம் வகுப்புகளில் 60% சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.

முன் அனுபவம்: 5 -7 ஆண்டுகள் விமானத் துறையில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பொறுப்பு:

விமானம் இயங்குவதற்கான குறைந்தபட்ச சாதனங்கள் பட்டியல் (IndiGo MEL)தயரித்தல்; இண்டிகோ நிறுவனத்தின் ஆவணங்களை விமான போக்குவரத்து தலைமை இயக்குனரகத்துக்கு சமர்பித்து, ஒப்புதல் வாங்கும் போது அலுவலராக செயல்படுதல், விமானத்தின் செயல்பாடுகள் குறித்து அவ்வப்போது இயக்குநரகம் வெளியிடும் வழிகாட்டு நெறிமுறைகள் உள்வாங்குதல், அதன் விளைவுகள் ஆராய்தல் உள்ளிட்ட பொறுப்புகள் இதில் அடங்கும்.

ஐஐஎம்சி நிறுவனத்தில் மாஸ் கம்யூனிகேஷன் முதுகலை டிப்ளமோ படிப்பு: ஜூன் 18க்கு முன் விண்ணப்பிக்கலாம்

இப்பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், மைக்ரோசாப்ட் எக்சல், எக்ஸ்எம்எல் போன்ற மென்பொருள்களை கையாளத் தெரிந்திருக்க வேண்டும்.

இந்தியாவின் அரியானா மாநிலத்தின் குருகிராம் நகரில் பணியமர்த்தப்படுவார்கள்.

கூடுதல் விபரங்களுக்கு, https://goindigo.app.param.ai/jobs/assistant-manager-749/ என்ற இணையதளத்தை கிளிக் செய்யவும்.

இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரையிலான செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.Source link

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube