பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் – News18 Tamil


ENGAGEMENT OF GRADUATE APPRENTICES (ENGINEERS):  பொறியியல் பட்டம் பெற்றவர்கள் மற்றும் டிப்ளமோ படித்த அப்ரண்டிஸ் பயிற்சிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO – உயர் ஆற்றல் ஆராய்ச்சி மையம்) வெளியிட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

காலியிடங்கள்: 25 

பொறியியல் மாணவர்கள் அப்ரண்டிஸ் – 10

டிப்ளமோ மாணவர்கள் அப்ரண்டிஸ் – 15

விண்ணப்பிக்க விரும்புவோர் கம்பியூட்டர் சயின்ஸ், மெக்கானிக்கல் என்ஜினியரிங், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் எலெக்ட்ரிக்கல் என்ஜினியரிங் உள்ளிட்ட துறைகளில் பொறியியல் அல்லது டிப்ளமோ பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு, கல்வித் தகுதி, கட்டணம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை ஆகியவைஆட்சேர்ப்பு அறிவிப்பில் (CENTRE FOR HIGH ENERGY SYSTEMS AND SCIENCES (CHESS)

DRDO, MINISTRY OF DEFENCE

No. CHESS/75/75500/ APPR /Advt-1/2022) தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன.

பிற விபரங்கள்:

இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர், தேசிய பயிற்சி பெறுவோருக்கான பயிற்சித் திட்டத்தின் கீழ் (என்ஏடிஎஸ்) தங்கள் பெயரை பதிவு செய்திருக்க வேண்டும். பதிவு செய்யாத நபர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

2019க்குப் பிறகு தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறப்பட்டு வருகின்றன. ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியான 25 நாட்களுக்குள் http://rac.gov.in அல்லது http://drdo.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.    

தெரிவு செய்யப்படும் முறை: நிர்ணயிக்கப்பட்ட கல்வி தகுதியில் பெற்ற மதிப்பெண்கள்  அடிப்படையிலும், நேர்காணலில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலும் உத்தேச இறுதிப் பட்டியல் தயாரிக்கப்படும்.  எனவே, ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது விண்ணப்பபதாரர் கல்வி தொடர்பான அனைத்து விபரங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.

 

நியமனத்தில் இடஒதுக்கீட்டுப் முறை பின்பற்றப்படும். எனவே, விண்ணப்பதாரர்கள் தகுதியான ஆவணங்களை பதிவேற்றம் செய்து சலுகையினை பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயிற்சி காலம்: ஓராண்டு.

அரசு அறிவித்த நெறிமுறைகளின் படி, பயிற்சி பெறுபவர்களுக்கு மாதாந்திர ஊதியம் அளிக்கப்படும்.

ENGAGEMENT OF GRADUATE APPRENTICES (ENGINEERS)

இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.Source link

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube