அதிர்ச்சியில் இங்கிலாந்து – News18 Tamil


நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ராஸ் டெய்லர், இவர் சமீபத்தில் ஓய்வு பெற்றார். இவர் 2010ல் பென் ஸ்டோக்ஸுடன் டர்ஹாம் அணிக்காக விளையாடும் போது, ​​நியூசிலாந்து அணிக்காக விளையாட விரும்புகிறீர்களா என்று இன்றைய இங்கிலாந்து கேப்டன் ஸ்டோக்சிடம் கேட்டதாக தெரிவித்தார். அப்போது 19 வயதான பென் ஸ்டோக்ஸ் தான் பிறந்த நாட்டிற்காக விளையாடுவதில் மிகவும் ஆர்வமாக இருந்தார், ஆனால் நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் முடிவால் அது நிறைவேறவில்லை என்று ராஸ் டெய்லர் தன் சுயசரிதை நூலில் தெரிவித்தார்.

ராஸ் டெய்லர் இது தொடர்பாகக் கூறும்போது, ​​“பென் ஸ்டோக்சுக்கு அப்போது 19 வயதிருக்கும், அவர் நியூசிலாந்து வீரர்தான். நான் அவரிடம் நியூசிலாந்துக்கு ஆடுகிறீர்களா என்று கேட்டேன். நியூசிலாந்து கிரிக்கெட் தலைமைச் செயலதிகாரி ஜஸ்டின் வானுக்கும் செய்தி அனுப்பிவிட்டேன், அதாவது ஸ்டோக்ஸ் ஒரு பிரமாதமான கிரிக்கெட் வீரர், நியூசிலாந்துக்கு ஆட வேண்டும்” என்று செய்தி அனுப்பினேன். ஆனால் அதற்கு அவர் சரியாக பதிலளிக்கவில்லை, ஸ்டோக்ஸ் வந்து உள்நாட்டு கிரிக்கெட்டில் ஆடட்டும் பிறகு பார்க்கலாம் என்று கூறினார்” என்று ராஸ் டெய்லர் எழுதியுள்ளார்.

நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச்சில் பிறந்த ஸ்டோக்ஸ், 12 வயதில் இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்தார், அப்போது அவரது தந்தை, முன்னாள் ரக்பி தொழில்முறை வீரர், ஜெரார்ட் ஸ்டோக்ஸ், கம்ப்ரியாவில் ஒரு தொழில்முறை லீக் பயிற்சியாளர் வேலையைப் பெற்றார்.

ராஸ் டெய்லர் மேலும் எழுதும் போது, ​​“பென் ஸ்டோக்ஸ் நியூசிலாந்திற்காக விளையாடுவதில் ஆர்வமாகவே இருந்தார், ஆனால் நியூசிலாந்து வாரியம் விரைவாக தீர்க்கமாகவும் செயல்படவும் அவருக்கு சில உறுதியான உறுதிமொழிகள் வழங்கப்பட வேண்டும், அதை வான் தெளிவாகச் செய்யத் தயாராக இல்லை.” என்று ராஸ் டெய்லர் எழுதியுள்ளார்.

பிறகு 2011-ல் இங்கிலாந்துக்காக ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமானார் பென் ஸ்டோக்ஸ். 2013-ல் மதிப்பு மிக்க ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகக் களமிறங்கினார் ஸ்டோக்ஸ். ஸ்டோக்ஸ் அதன் பிறகு 2019 உலகக்கோப்பை இறுதியில் ஒரு பெரிய இன்னிங்ஸை ஆடி உலகக்கோப்பையை முதன் முதலில் இங்கிலாந்து வெல்லக் காரணமானார். இன்று இங்கிலாந்தின் கேப்டனாகவே ஆகி நியூசிலாந்துக்கு ஒயிட்வாஷ் தோல்வியை அதாவது 3-0 டெஸ்ட் தோல்வியை பரிசாக அளித்தார் பென் ஸ்டோக்ஸ்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV போன்றவற்றைக் காணலாம்.



Source link

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube