முக்கியமான நாட்கள்: இணைய வழியில் விண்ணப்பங்கள் சமர்பிப்பதற்குரிய கடைசி நாள் : ஜூன் 21; அன்றிரவே விண்ணப்பக் கட்டணம் செலுத்தியிருக்க வேண்டும்.
முன்னதாக, கடந்த மே 7ஆம் தேதியன்று டெல்லியில் உள்ள தலைமையகம் மற்றும் அதன் இதர அமைப்பு நிறுவனங்களில் காலியாக உள்ள உதவியாளர் பணிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை இந்திய வேளாண் ஆராய்ச்சி குழு அறிவித்துள்ளது. அப்போது, இதற்கான கடைசி நாள் ஜூன் 1 அன்று தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும், பெருமளவிலான மாணவர்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு, தேர்வுக்கான காலக்கெடுவை வேளாண் ஆராய்ச்சி குழு நீட்டித்துள்ளது.
கணினி அடிப்படையிலான முதல்நிலை தேர்வு: ஜூன் மாதம் கடைசி வாரத்தில் நடைபெறும்
முதன்மைத் தேர்வு: பின்னர் அறிவிக்கப்படும்.
திறனறிவுத் தேர்வு : பின்னர் அறிவிக்கப்படும்.
வயது வரம்பு: இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வயது 01.06.2022 அன்று 20-க்கு மேலும், 30 வயதுக்கு கீழும் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும்.
எனவே, நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் கண்ட சாதிகள்/ பட்டியல் கண்ட பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு பெற தகுதியுடையவர்கள். மூன்றாம் ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடையவர்கள். நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் 10 ஆண்டு வரை சலுகை பெற தகுதியுடைவராவர்.
எது எவ்வாறாயினும், 45 வயது நிறைவடைந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க எந்த வகையிலும் தகுதியற்றவர்களாவர்.
விண்ணப்பக் கட்டணம்: இதற்கான, விண்ணப்ப பதிவு கட்டணம் ரூ.700ஆகும். கூடுதலாக, தேர்வுக் கட்டணமாக ரூ.700 செலுத்த வேண்டும். பட்டியல் சாதிகள், பழங்குடியினர், முன்னாள் ராணுவத்தினர், நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள், அனைத்து பிரிவினரைச் சேர்ந்த மகளிர் தேர்வுக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. அவர்கள், விண்ணப்பக் கட்டணம் ரூ.500 ஐ மட்டும் செலுத்த வேண்டும் எனவே, பொதுப் பிரிவு மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ரூ.1200 செலுத்த வேண்டும்.
கல்வித் தகுதி: பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பட்டப் படிப்பு பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பம் செய்வது எப்படி:
விண்ணப்பதாரர்கள், https://www.iari.res.in/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.
இணையதளத்தில் ஆதார் எண், ஓட்டுநர் உரிமம், பான் எண், பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, மாணவர் அடையாள அட்டை என மத்திய மாநில அரசுகள் வழங்கிய ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை இணையதளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். தேர்வு மற்றும் நேர்காணலின் போது, பதிவேற்றம் செய்த அடையாள ஆவணத்தின் அசலை எடுத்துச் செல்ல வேண்டும்.
ஆன்லைன் விண்ணப்ப படிவத்தில், விண்ணப்பதாரர்களின் வண்ண பாஸ்போர்ட் புகைப்படம் மற்றும் கையெழுத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
முதல்நிலை மற்றும் முதன்மைத் தேர்வுகளில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் உத்தேசப் பட்டியல் தயாரிக்கப்படுகிறது.
ஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த இணைப்பு கிளிக் செய்யவும்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரையிலான செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.