விக்ரம்: இது ஒன்னுதாங்க மைனஸ்… மத்தப்படி ‘விக்ரம்’ வேற லெவல்!
ரசிகர்கள் மட்டுமின்றி பிரபலங்கள் பலரும் விக்ரம் படத்தை பார்க்க ஆர்வமாக உள்ளனர். விக்ரம் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இசையமைப்பாளர் அனிருத், நடிகர்கள் நரேன், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் ரசிகர்களுடன் அமர்ந்து விக்ரம் படத்தைப் பார்த்து ரசித்தனர்.
இந்நிலையில் விக்ரம் படத்தை பார்க்க காத்திருக்கும் இயக்குநர் நவீன் முகமதலி ரசிகர்களுக்கு வேண்டுகோள் ஒன்றை வைத்துள்ளார். அதாவது, தயவுசெஞ்சு சஸ்பென்ஸ் ஏதாவது இருந்தா ஒடச்சி விட்றாதிங்கப்பா. தலைவன் படத்த ரொம்ப வருஷத்துக்கப்புறம் ஆர்வமா பாக்க காத்துகிட்டிருக்கோம்… என குறிப்பிட்டுள்ளார்.
Vikram twitter review: லோகேஷ் சம்பவம் பண்ணிட்டாரு… ஃபர்ஸ்ட் ஆஃப் வெறித்தனம்.. செகண்ட் ஆஃப் டெரிஃபிக்!
மேலும் Say No to spoilers என்ற கமலின் போஸ்டரையும் ஷேர் செய்துள்ளார் நவீன் முகமதலி. நவீனின் இந்தப் பதிவை பார்த்த ரசிகர்கள், அப்படியென்றால் படம் பார்க்கும் வரை டிவிட்டர் பக்கம் வராதீங்க என பதிலுக்கு பதிவிட்டுள்ளனர்.