ஈரோட்டில் நெல்லை சாலையில் கொட்டியும், டிராக்டரை நிறுத்தியும் போராட்டம்: தனியாரிடம் உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் வேதனை


ஈரோடு: ஈரோடு மாவட்டம் சோளங்காபாளையத்தில் நெல்கொள்முதல் மையம் திறக்கக்கோரி ஈரோடு -கரூர் பிரதான சாலையில் நெல்லை கொட்டியும், டிராக்டரை நிறுத்தியும் விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சோளங்காபாளையத்தில் அரசு நெல்கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால், அரசு நிர்ணயித்த ஆதாரவிலையை விட மிகக்குறைந்த விலைக்கு நெல்லை விற்பனை செய்யும் நிலை ஏற்பட்டிருப்பதாக கூறி விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். டிராக்டரில் நெல்லை கொண்டுவந்த விவசாயிகள் கரூர் பிரதான சாலையின் நடுவே கொட்டி மறியலில் ஈடுபட்டனர்.

அரசு ஆதாரக்கொள்முதல் விலையாக கிலோவிற்கு 20 ரூபாய் 60 காசுகள் நிர்ணயித்தபோதும், கொள்முதல் மையம் திறக்கப்படாததால் தனியாரிடம் குறைந்த விலைக்கு, அதவாது கிலோ 14 ரூபாய்க்கு நெல்லை விற்பனை செய்யும்  நிலை ஏற்பட்டிருக்கிறது. அதையும் வியாபாரிகள் வாங்க மறுப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். டிராக்டரில் நெல்லை கொண்டுவந்த விவசாயிகள் கரூர் பிரதான சாலையின் நடுவே நெல்லை கொட்டி மையலில் ஈடுபட்டனர். காலிங்கராயர் கால்வாய் பாசனத்தில் இந்த பகுதியில் மட்டும் சுமார் 700 ஏக்கரில் அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.        Source link

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube