ஹீரோ மோட்டோ கார்ப் என்பது உலகின் மிகப்பெரிய இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனம் ஆகும். இந்நிறுவனத்தின் கடந்த மே மாத விற்பனை குறித்த ரிப்போர்ட் வெளியாகியுள்ளது. இந்த மாதம் அவர்கள் விற்பனை கணிசமாக உயர்ந்துள்ளது. கொரோனா தளர்வுகளிலிருந்து மக்கள் விடுபட்டது. உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஆட்டோமொபைல் துறையே தற்போது வளர்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.

ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம் கடந்த மே மாதம் மொத்தம் 4,86,704 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது கடந்த 2021 மே மாத விற்பனையை விட 165.89 சதவீதம் அதிகம். அந்த நேரத்தில் வெறும் 1,83,044 வாகனங்கள் மட்டுமே விற்பனையாகியிருந்தது. இதில் உள்நாட்டு விற்பனையைப் பொருத்தவரை கடந்த மே மாதம் 4,66,466 வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. இது கடந்தாண்டு மே மாதம் வெறம் 1,59,561ஆக மட்டுமே இருந்தது.

ஏற்றுமதியைப் பொருத்தவரை கடந்த மே மாதம் சிறிய சரிவு ஏற்பட்டுள்ளது. மொத்தம் 20,238 வாகனங்கள் மட்டுமே ஏற்றுமதியாகியுள்ளன. ஆனால் கடந்தாண்டு மே மாதத்தில் இது 23,483 ஆக இருந்தது.

விற்பனையில் உள்ள வளர்ச்சி பைக் மற்றும் ஸ்கூட்டர் இரண்டு பிரிவிலுமே உள்ளது. பைக்களை பொருத்தவரை 153.07 சதவீத வளர்ச்சி பெற்றுள்ளது. 4,52,246 பைக்குக்கள் கடந்த மே மாதம் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்தாண்டு மே மாதம் மொத்தமே 1,78,706 பைக்குகள் மட்டுமே விற்பனையாகியிருந்தன. கடந்த மே மாதம் அந்நிறுவனத்தின் ஒட்டு மொத்த விற்பனையில் பைக்குக்கள் மட்டும் 92.92 சதவீத பங்கை வகிக்கிறது.

ஸ்கூட்டர் விற்பனை ஒரே ஆண்டில் 694.33 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது. கடந்தாண்டு மே மாதம் வெறம் 4,338 ஸ்கூட்டர்கள் மட்டுமே விற்பனையான நிலையில் இந்தாண்டு அது 34,458 ஆக உயர்ந்துள்ளது. ஒரே ஆண்டில் 30,120 ஸ்கூட்டர்கள் விற்பனை உயர்ந்துள்ளது. ஸ்கூட்டரை பொருத்தவரை அந்நிறுவனத்தின் ஒட்டு மொத்த விற்பனையில் 7.08 சதவீதம் உயர்ந்துள்ளது.

இதுவே கடந்த ஏப்ரல் மாத விற்பனையைக் கடந்த மே மாத விற்பனையுடன் ஒப்பிடும் போது 16.26 சதவீதம் விற்பனை உயர்ந்துள்ளது. சுமார் 68,082 வாகனங்கள் விற்பனை அதிகமாகியுள்ளது. உள்நாட்டு விற்பனையில் 17.06 சதவீதமும், ஏற்றுமதியில் 0.53 சதவீதமும் வளர்ச்சியைச் சந்தித்துள்ளது. இதில் பைக் பிரிவு மட்டும் 15.18 சதவீத வளர்ச்சியையும், ஸ்கூட்டர் பிரிவு 32.56 சதவீத வளர்ச்சியையும், பெற்றுள்ளது.

ஒட்டு மொத்தத்தில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் வழக்கம் போது இந்த மாதமும் சிறப்பான விற்பனையைப் பெற்றுள்ளது. தற்போது வரை ஹீரோ மோட்டாகார்ப் நிறுவனம் தான் இந்தியாவில் அதிகமாக இருசக்கர வாகனத்தை விற்பனை செய்யும் நிறுவனமாக இருக்கிறது. இந்நிறுவனத்தின் விற்பனைக்குப் போட்டியாக வேறு எந்த நிறுவனமும் இதுவரை இல்லை என்பது மறுக்க முடியாத உண்மை.