தமிழ் மற்றும் தெலுங்கில் பல்வேறு படங்களுக்கு இசையமைத்த ஹிப்ஹாப் ஆதி சமீப காலமாக நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். அவரது நடிப்பில் கடந்த 2017-ம் ஆண்டு முதல், மீசைய முறுக்கு, நட்பே துணை, நான் சிரித்தால், சிவகுமாரின் சபதம், அன்பறிவு ஆகிய படங்கள் வெளிவந்துள்ளன.
இவற்றில் மீசைய முறுக்கு மட்டுமே ரசிகர்கள் மத்தியில் ஓரளவு வரவேற்பைப் பெற்றது. மற்ற எந்தப் படமும் சொல்லிக் கொள்ளும் படியாக அமையாத நிலையில் ஆதி தொடர்ந்து படம் நடித்து வருகிறார்.
இதையும் படிங்க – தமிழ் சினிமாவின் ‘ஆல் இன் ஆல் அழகு ராஜா’ கவுண்டமணி பிறந்த நாள் ஸ்பெஷல்!
கடைசியாக வெளிவந்த அன்பறிவு படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்நிலையில் ஆதியை வைத்து மீண்டும் புதிய படத்தை தயாரிக்கப்போவதாக சத்யஜோதி அறிவித்து இன்று பூஜை நடைபெற்றது.
பரபரப்பான காம்போவின் எங்கள் பூஜையின் படங்கள் @hiphoptamizha & மரகத நாணயம் புகழ் @ArkSaravan_Dir கள் #வீரன் ⚡
ஏ @hiphoptamizha இசை சார்ந்த
டோப் @தீபக்ட்மேனன்
ஆசிரியர் @editor_prasanna pic.twitter.com/BgXSgHf6WL— சத்ய ஜோதி பிலிம்ஸ் (@SathyaJyothi) மே 25, 2022
ஏறக்குறைய 6 மாத தயாரிப்புக்குப் பிறகு மீண்டும் படப்பிடிப்பிற்குத் திரும்புகிறேன் ♥ இது பெரியதாக இருக்கும் 💪 பொறுமையாக காத்திருந்து ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி #வீரன் தயாராகிறான். 🙌 pic.twitter.com/1LlLQVMuue
— ஹிப்ஹாப் தமிழா (@hiphoptamizha) மே 25, 2022
புதிய படத்திற்கு வீரன் என்று பெயர் வைத்துள்ளனர். இன்றைக்கே முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்கி விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தை மரகத நாணயத்தை இயக்கிய ஏ.ஆர்.கே. சரவணன் இயக்குகிறார். தீபக் மேனன் ஒளிப்பதிவும், பிரசன்னா எடிட்டிங் பணிகளையும் மேற்கொள்கின்றனர்.
மற்ற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் விபரம் விரைவில் வெளியாகவுள்ளது. அஜித் நடிப்பில் வெளிவந்த விஸ்வாசம் மெகாஹிட் படத்தின் மூலம் சத்யஜோதி ஃபிலிம்ஸ் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்படுகிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரையிலான செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.