கமலஹாசன் நடித்த ‘விக்ரம்’ திரைப்படம் நேற்று பிரம்மாண்டமாக உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது இந்த படத்தின் முதல் காட்சி முடிந்தவுடன் பாசிட்டிவ் விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் பரவத் தொடங்கியது. சமூக ஊடகங்கள், ‘விக்ரம்’ படத்தை கொண்டாடி வருகின்றன ஊடகங்கள் அனைத்தும் பாசிட்டிவ் விமர்சனங்களால் இந்த படத்தின் வசூல் சாதனை செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று முதல் நாளில் ‘விக்ரம்’ படத்தின் வசூல் எவ்வளவு என்ற தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் சுமார் 800க்கும் மேற்பட்ட திரையரங்குகளிலும் உலகம் முழுவதும் 5000 திரையரங்குகளிலும் வெளியான ‘விக்ரம்’ திரைப்படம் முதல் நாளில் 40 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாகவும், அதில் தமிழகத்தில் மட்டும் 34 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
நேற்று ஏறக்குறைய அனைத்து திரையரங்குகளிலும் ஹவுஸ்புல் ஆகிவிட்ட நிலையில் வார இறுதி நாட்களில் இன்றும் நாளையும் நல்ல வசூல் என்றும், பாசிட்டிவ் விமர்சனம் காரணமாக வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில் இந்த படம் 100 கோடி ரூபாய் வசூலை எட்டுவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாகவும் டிரெடிங் கூறுகின்றன.
இதுவரை வெளியான கமல்ஹாசன் படங்களிலேயே இந்த படம்தான் அதிக ஓபனிங் வசூல் குவித்த படமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.