கௌதம், மஞ்சிமா: மஞ்சிமாவுடன் திருமணம்.. அப்பா சொன்ன விஷயம்: கெளதம் கார்த்திக் ஓபன் டாக்.! – நடிகர் கௌதம் கார்த்திக் தனது திருமணம் பற்றி பேசினார்


நவரச நாயகன் கார்த்திக்கின் மகனான கௌதம் கார்த்திக் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நாயகர்களின் வரிசையில் உள்ளார். ‘தேவராட்டம்’ படத்தில் நடித்தபோது கெளதம், மஞ்சிமா மோகன் இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்க ஆரம்பித்ததாக இணையத்தில் செய்திகள் பரவியது. இதனை இருவரும் உறுதிப்படுத்தினர்.

இந்நிலையில் சமீபத்தில் தங்களின் திருமண தேதியை அறிவித்த இவர்கள் பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசினர். அப்போது ‘தேவராட்டம்’ படத்தின் படப்பிடிப்பின் பின்னர் ஓராண்டும் நண்பர்களாக மட்டுமே பழகியதாகவும், அதன் பின்னரே காதலிக்க தொடங்கியதாகவும் கூறியுள்ளனர்.

உண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

மேலும் கெளதம் கார்த்திக் பேசும் போது, ​​எங்கள் காதல் பெரிய கதையெல்லாம் ஒன்றுமில்லை. முதலில் நான் தான் காதலை சொன்னேன். அதன்பிறகு இரண்டு நாள் கழித்துதான் மஞ்சிமா ஒத்துக்கொண்டார். அந்த இரண்டு நாளும் எனக்கு பயம் அதிகமாக இருந்தது. பிறகு அவர் ஒப்புக்கொண்டார்.

மகேஷ் பாபு: திடீரென்று எல்லாமே போய்விட்டது: மறைந்த தந்தை குறித்து மகேஷ் பாபு உருக்கம்.!

நடிகர் கார்த்திக்கும் காதல் திருமணங்கள் செய்தவர்தான். தன்னுடன் சோலைக்குயில் என்ற படத்தில் நடித்த ராகினி என்கிற நடிகையை காதல் திருமணம் செய்தார். கெளதம் கார்த்திக்கின் தந்தை எப்போதும் சொல்வாராம். தனக்கான பெண் யார் என்று உணரும் போது தான் இளைஞனாக மாறுவோம் என்று. அந்த வகையில் மஞ்சிமா மோகனை பார்த்த பிறகுதான் சிறு வயதிலிருந்து நான் இளைஞனாக மாறியதை உணர்ந்தேன் என கௌதம் கார்த்திக் கூறியுள்ளார்.

Thalapathy 67: அறிவிப்புக்கு முன்பே கோடிகளை குவிக்கும் ‘தளபதி 67: ஆச்சரியத்தில் கோலிவுட்.!

தொடர்ந்து பேசிய கார்த்திக், தனிப்பட்ட முறையில் வைக்கும் திருமண நிகழ்வை தவிர்த்து வரவேற்பு நிகழ்ச்சியோ வேறு எந்த ஏற்பாடும் செய்யவில்லை. திருமணத்திற்கு பின்பு முடிந்தால் மீண்டும் சந்திப்போம் ஆனால் கண்டிப்பாக திருமணத்தன்று மதியத்திற்குள் புகைப்படங்களை பத்திரிக்கையாளர்களுக்கு அனுப்புகிறோம் என்று கூறியுள்ளார்.Source link

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube