கர்ப்பமாக இருக்க பாலின நிலை முக்கியமானது


யாமினியும், கோகுலும் மருத்துவமனைக்கு வந்தனர்.
யாமினியை பல வருடங்களாக எனக்கு தெரியும்..
யாமினி தன் தாயின் சிகிச்சைக்காக வருவார். குடும்பப் பொறுப்புகளின் காரணமாக யாமினிக்கு 30 வயதில் தான் திருமணத்தைப் பற்றி சிந்திக்க முடிந்தது. அவருடைய கணவருக்கும் அவருடைய வயது தான். திருமணமாகி ஆறு மாதங்களே ஆகிறது.

திருமணத்திற்கு முன்பே யாமினி “எனக்கு 30 வயதாகிவிட்டது. என்னுடைய திருமண வாழ்வில் ஏதேனும் சிக்கல்கள் வருமா? என்று ஆலோசனைக்காக வந்திருந்தார். 30 வயதானதால் தள்ளிப்போடாமல், குழந்தைக்குத் திட்டமிடுங்கள் என்று அறிவுரை கூறினேன். திருமணமாகி ஆறு மாதங்கள் ஆன நிலையில் வந்திருக்கிறாள். கர்ப்பமாக இருப்பாரோ? ஏதாவது குட் நியூஸா?” என்று வினவினேன்.

சோகத்துடன் “இல்லை! டாக்டர்!! அது சம்பந்தமாக தான் உங்களிடம் சில விஷயங்கள் பேச வேண்டும்” என்று கூறினார்.
“ஆறு மாதங்களாக குழந்தைக்காக திட்டமிடுகிறோம். பிரயோசனமில்லை. இந்த மாதம் கூட சரியான தேதியில் மாதவிடாய் வந்துவிட்டது. மிகவும் வருத்தமாக இருக்கிறது. பணியில் எத்தனையோ விஷயங்களை சாதிக்கும் எனக்கு, இந்த ஒரு விஷயம் மட்டும் , புதிராக இருக்கிறது. என்னுடன் திருமணம் ஆன இரண்டு தோழியர், இருவருமே கர்ப்பமாக இருக்கிறார்கள். , என்று ஒவ்வொரு மாதமும் பயந்து கொண்டே இருக்கிறார். எனக்கும் ஏதாவது பெரிய பிரச்சினை இருக்குமோ ?என்ற பயம் வருகிறது என்றார்.

யாமினி “எனக்கு டாக்டரிடம் கொஞ்சம் பர்சனலாக பேச வேண்டும் என்று கணவரைப் பார்க்க, அவர் எழுந்து வெளியே சென்று விட்டார். “டாக்டர்! அப்படி ஏதாவது உள்ளதா? என்று நிறுத்தினார்.

இது பலருக்கும் உள்ள பொதுவான சந்தேகம்தான். ஆனால் அறிவியல் உண்மை என்னவெனில் கர்ப்பமாவதற்கென்று, ஒரு குறிப்பிட்ட போசிஷன் அல்லது நிலை இல்லை.
ஆனால் ஒரு சிலர் தாம்பத்ய உறவுக்குப் பின் முழுவதுமாக விந்து திரவம்(விந்து) வெளியேறி விடுவதாகக் கூறுவார்கள்.

அவர்களுக்கு உறவுக்கு பிறகு இடுப்புக்கு கீழே இரண்டு தலையணைகளை, உயரமாக வைத்துக்கொள்ள சொல்லுவோம். அவ்வாறு செய்யும்பொழுது வெளியேறுவதற்கான வாய்ப்பு குறைவு.

பெண்குயின் கார்னர் : திருமணம் ஆன ஒரு மாதத்திற்குள் கருத்தரிக்க முடியுமா..? மகப்பேறு மருத்துவரின் விளக்கம்..!

ஆனால் அறிவியல் உண்மை என்னவெனில் யோனிப்பாதையில் சிந்திய சில நிமிடங்களிலேயே விந்தணுக்கள் வேகமாக நீந்தி கர்ப்ப வாயில் ஒட்டிக்கொண்டு கர்ப்பவாயை தாண்டி கருப்பைக்குள் செல்லத் தொடங்கிவிடும்.அத்துடன் வெளிவரக்கூடிய விந்து திரவத்தில் எல்லா அணுக்களும் வந்துவிடாது. அதனால் அந்த சந்தேகம் தேவையில்லை.

அதுபோல சிலருக்கு தாம்பத்திய உறவுக்கு பிறகு உடனே ஓய்வறைக்கு சென்று சிறுநீர் கழிக்கும் பழக்கம் உள்ளது. அவர்கள்
உறவுக்கு முன்பே சிறுநீர் கழிக்கும் பழக்கத்தை வைத்துக் கொள்ள வேண்டும்.

pregnancy 1 1

எல்லாமும் சரியாக இருக்கும் ஒரு தம்பதிக்கு ஒரு மாதத்தில் கருத்தரிப்பதற்கான வாய்ப்பு 25 முதல் 40 சதவீதம் மட்டுமே. சரியாக புரிந்து கொள்ள வேண்டும் என்றால் நான்கு மாதங்களில் ஒரு தம்பதிக்கு கருத்தரிப்பதற்கான வாய்ப்பு உள்ளது. அதனால் முதல் ஆறு மாதங்களில் கருத்தரிக்கவில்லை என்றால் நமக்கு ஏதோ ஒரு பிரச்சினை இருக்கிறது என்று எண்ண வேண்டியதில்லை. மனதை ரிலாக்ஸ்டாக வைத்துக்கொண்டு உங்களுடைய மண வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழுங்கள். குழந்தை வேண்டும் என்பதற்காக மட்டுமே தாம்பத்திய உறவு என்று எண்ணும்போது ஏராளமான மன அழுத்தத்திற்கு பல தம்பதிகள் உள்ளனர். அது தேவையே கிடையாது.

பெண் குயின் கார்னர் : பரிசோதனையில் கர்ப்பம்… ஸ்கேன் செய்தால் கரு உருவாகவில்லை… என்ன காரணம்..?

அதுவும் முதல் 1-2 வருடங்களில் மனதை இலேசாக வைத்துக் கொண்டு இருவரும் சந்தோஷமாக இருப்பதன் அடையாளமாகவே குழந்தை தோன்றும். இது 80% தம்பதியருக்கு நடப்பதை பார்த்திருக்கிறோம். இருப்பினும் 30 வயது கடந்து விட்டதால், ரத்த பரிசோதனைகள், கருப்பையின் நிலையை ஸ்கேன் செய்து பார்க்கலாம். அவருக்கும் விந்தணுக்களை பரிசோதித்து பார்ப்போம்.

இருவருக்கும் எல்லாம் சரியாக இருந்தது. குறைந்தது மற்றொரு மூன்று மாத முயற்சி செய்யுங்கள். இல்லையேல் சிகிச்சையை தொடங்குவோம் என்று தைரியம் கூறி அனுப்பி வைத்தேன்.

மருத்துவர் ஜெயஸ்ரீ ஷர்மாவை தொடர்பு கொள்ள : doctorjsharma@gmail.com

இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரையிலான செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.Source link

Please follow and like us:
icon Follow en US
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube