நெய் vs வெண்ணெய் எது சிறந்தது


அதிக கொழுப்பு மற்றும் அதிக கலோரி உள்ள பொருட்கள் என்று வெண்ணெய் மற்றும் நெய் ஆகிய இரண்டையுமே மருத்துவர்கள் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் சொல்வதைத் தவிர்க்கிறார்கள். குறிப்பாக வெண்ணெய் மற்றும் நெய் சேர்த்து செய்யப்பட்ட உணவுப் பொருட்களை அதிகம் சாப்பிடுவதன் மூலம் உடல் எடை கூடுவதோடு மட்டுமல்லாமல் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கும்.

இதனால் இதய பாதிப்புகள் ஏற்படும் அபாயமும் உள்ளது. அதே நேரத்தில் வெண்ணெய் மற்றும் நெய் என்பது டிரான்ஸ்கொழுப்பு உணவுகள் கிடையாது. இவற்றில் ஆரோக்கியமான கொழுப்புகளும் உள்ளன. இதனால் தான் நெய் மற்றும் வெண்ணெய் இரண்டுமே பண்டைய காலத்தில் இருந்து உடலுக்கு ஊட்டம் அளிக்கும் உணவுப் பொருளாகவும் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. வெண்ணெய் மற்றும் நெய், இரண்டில் எது ஆரோக்கியமானது, எதை அதிகம் பயன்படுத்தலாம் என்ற சந்தேகமும் பலருக்கு இருக்கிறது.

சமையலில் வெண்ணைக்கு பதிலாக நெய் சேர்ப்பது என்பது சுவையில் கனிசமான மாற்றத்தை ஏற்படுத்தும். ஒரு சில உணவுகளில் வெண்ணை தான் சேர்க்க முடியும், அதே போல ஒரு சிலவற்றில் நெய் பயன்படுத்துவது தான் சுவையை அதிகரிக்கும். எனவே வெண்ணெய் மற்றும் நெய் என்று வரும்போது எதை பயன்படுத்துவது சிறந்தது என்பதை இங்கே பார்க்கலாம்.

வெண்ணெய் மற்றும் நெய்யில் உள்ள ஊட்டச்சத்துக்கள்

நெய் ஊட்டச்சத்தின் களஞ்சியம் என்று கூறலாம். அதேநேரத்தில் வெண்ணையிலும் அதிக சத்துக்கள் உள்ளன. இரண்டையும் ஒப்பிடும் போது நெய்யில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் அதிகம். வைட்டமின் ஈ, வைட்டமின் சி, ஆண்டி-ஆக்ஸிடென்ட்கள், கால்சியம் ஆகிய ஊட்டச்சத்துக்கள் இரண்டிலும் உள்ளன.

எலுமிச்சை பழங்களை இப்படி போட்டு வைத்தால் 6 மாதம் கெட்டுப்போகாது..!

நோய் எதிர்ப்பு சக்தி

குழந்தைகள் ஆரோக்கியமாகவும் வலுவாகவும் வளர்வதற்கு தினசரி உணவில் நெய் சேர்க்கும் பழக்கம் இருக்கிறது. நெய்யில் கேன்சரை எதிர்க்கும் CLA என்ற ஒரு அமிலம் உள்ளது. இது கேன்சர் தவிர கார்டியோவாஸ்குலர் நோய்களையும் தடுக்கும். அதே போல வெண்ணெய்யில் ஃப்ரீ ரேடிகல்ஸ் எனப்படும் உடலில் உள்ள செல்கள் தளர்ந்து போகும் நிலையைத் தடுத்து உட்புறத்தில் ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. வெண்ணெய் பார்வை குறைபாடு ஏற்படாமல் தடுக்கவும் மார்பகம் மற்றும் வயிற்றுப் புற்றுநோய் வராமல் தடுக்கவும் உதவுகிறது.

butter

அதிக கலோரிகள் மற்றும் கொழுப்புகள்

வெண்ணெய்யுடன் ஒப்பிடும் போது நெய்யில் இருக்கும் கொழுப்பின் அடர்த்தி அதிகமாக இருக்கும். எனவே இதில் அதிக கலோரிகளும் உள்ளன. ஆனால் இரண்டையும் ஒப்பிடும் போது கலோரிகள் வித்தியாசம் பெரிய அளவில் இல்லை. ஒரு டேபிள்ஸ்பூன் நெய்யில் 102 கலோரிகளும் ஒரு டேபிள்ஸ்பூன் வெண்ணையில் 102 கலோரிகளும் உள்ளன.

முந்திரியை எத்தனை நாட்கள் வரை சேமிக்கலாம்..? கெட்டுபோன முந்திரிகளை கண்டறிய டிப்ஸ்..!

லாக்டோஸ் இன்டாலரன்ஸ்

நெய் வெண்ணெய் இரண்டுமே பாலில் இருந்து தயாரிக்கப்படும் பொருளாக இருந்தாலும் நெய் என்பது பாலின் இறுதிப் பொருள். எனவே நெய்யில் குறைவான எண்ணிக்கையில்தான் பால் புரதங்கள் உள்ளன. பால் சம்பந்தப்பட்ட உணவுகளில் அலர்ஜி இருப்பவர்கள் மற்றும் லெக்டோஸ் இன்டலரன்ஸ் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்கள் வெண்ணையை தவிர்த்து நெய் சாப்பிடலாம்.

ghee butter

சமையலுக்கு வெண்ணெய்யா நெய்யா?

இனிப்பு உணவுகளுக்கு குறிப்பாக பேக்கிங் செய்யும் போது வெண்ணெய் சேர்ப்பது மிகவும் பொருத்தமாக இருக்கும். அதேபோல காரமான உணவுகளின் சுவையும் மணமும் கூட்டுவதற்கு நெய் சிறந்த தேர்வாக இருக்கும்!

இந்த பிரச்சனை இருப்பவர்கள் பிரியாணி இலையை உணவில் சேர்த்துக்கொள்ளவே கூடாதாம்..!

நெய் மற்றும் வெண்ணெய் இரண்டுக்கும் மிகப்பெரிய வித்தியாசங்கள் இல்லை. உங்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு நீங்கள் நெய் அல்லது வெண்ணெய்யைப் பயன்படுத்தலாம். ஆனால் இரண்டுமே அதிக கலோரிகளைக் கொண்டிருப்பதால் குறைவான அளவு உடல் எடை அதிகரிக்காமலும் கொலஸ்ட்ரால் அளவு கட்டுக்குள் வைத்திருக்கவும் உதவும்.

இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரையிலான செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.Source link

Please follow and like us:
icon Follow en US
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube