காலியிடங்கள்: 1,544
நிர்வாகப் பணி (நிர்வாகப் பதவி) – 1,044
உதவி மேலாளர் – 500
நிர்வாகப் பணி விபரங்கள்:
முக்கியமான நாட்கள்:
ஜூன் 3 முதல் 17ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே அனுப்பப்பட வேண்டும்.
காலியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. ஓராண்டுகாலத்துக்குப் பிறகு, விண்ணப்பதாரரின் செயல்திறன் அடிப்படையிலும், பிற அவசியங்கள் கருதியும் பணி காலம் அதிகபட்சமாக ஈராண்டுகள் வரை நீட்டிக்கப்படலாம். மூன்றாண்டு காலத்தை வெற்றிகரமாக முடித்தவர்கள் உதவி மேலாளர் கிரேடு ஏ பதவிக்கு தெரிவு செய்யப்படுவார்கள்.
கல்வித் தகுதி: பல்கலைக்கழகம் மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட உயர்கல்வி நிறுவனங்களில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம்: முதல் ஆண்டில் மாத ஊதியமாக ரூ 29,000 வழங்கப்படும். இரண்டாம் ஆண்டு ரூ. 31,000-ம், மூன்றாம் ஆண்டு ரூ. 34,000m மாத ஊதியமாக வழங்கப்படும்.
உதவி மேலாளர் – 500
பெங்களூரில் இயங்கும் மணிப்பால் கல்வி சேவைகள் பிரைவேட் லிமிடெட் , கிரேட்டர் நொய்டாவில் நிட்டே ஆகிய கல்வி நிறுவனங்களுடன் இணைந்து ஐடிபிஐ வங்கி, வங்கியியல் மற்றும் நிதியியல் துறையில் 1 ஆண்டு முதுகலை டிப்ளமோ சான்றிதழ் படிப்பை வழங்குகிறது. 9 மாத பாடக்கல்வி வாயிலாகவும், 3 மாத பயிற்சி வகுப்பாகவும் இருக்கும்.
இந்த முதுகலை படிப்புச் சான்றிதழ் பெற்றவர்கள், தேவைகளின் அடிப்படையில் உதவி மேலாளர் பணிக்கு நியமிக்கப்படுவார்கள் (ஐடிபிஐ வங்கி PGDBF 2022-23 இல் உதவி மேலாளராக உள்வாங்குவதற்காக சேர்க்கைகள்)
காலியடங்கள்: 500
முக்கியமான நாட்கள்: ஜூன் 3 முதல் 23ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
IDBI வங்கி PGDBF – 2022-23 இல் நிர்வாகிகள் ஆட்சேர்ப்பு (ஒப்பந்த அடிப்படையில்) மற்றும் சேர்க்கைகள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரையிலான செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.