இந்திய தோல் நிறத்திற்கான முடி நிறங்கள்


கருகருவென்ற நீளமான கூந்தல் தான் அழகு என்ற காலம் மாறி, கருப்பான கூந்தலும் அழகு என்று ஆப்ஷனலாக மாறிவிட்டது. பிரவுன், அடர் சிவப்பு, தங்க நிறம், வயலட், ஏன் மஞ்சள் நிறம் என்று பல நிறங்களில் கூந்தலை ஸ்டைல் ​​செய்ய விரும்புபவர்கள். ஹேர் கலரிங் என்று வரும் போது, ​​தனக்கு எந்த நிறம் பிடிக்கும் என்பதை விட, எந்த நிறம் பொருத்தமாக இருக்கும் என்பது மிகவும் முக்கியம்.

இளநரையை மறைப்பதற்காக, தோற்றத்தில் மாற வேண்டும், டிரெண்டில் இருப்பது, நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் அல்லது புதிய ஸ்டைல் ​​முயற்சி செய்து பார்க்க வேண்டும் என்ற காரணத்திற்காக பலரும் கூந்தலை கலர் செய்து பார்க்க வேண்டும். இந்தியர்களின் சரும நிறங்களுக்கு ஏற்றவாறு ஹேர் கலரிங் தேர்வு செய்ய வேண்டும். நீங்கள் ஹேர் கலரிங் செய்ய விரும்பினால், உங்கள் ஸ்கின் டோனுக்கு ஏற்ற கலரை எப்படி தேர்வு செய்ய வேண்டும் என்பது பற்றிய விவரங்கள் இங்கே.

வார்ம் அல்லது கூல் ஸ்கின் டோன்?

உங்கள் சரும நிறத்துக்கு ஏற்ற சரியா ஹேர் கலரை தேர்வு செய்ய, நீங்கள் வார்ம் ஸ்கின் டோன் கொண்டவரா அலல்து கோல்ட் ஸ்கின் டோன் கொண்டவரா என்பதைப் பார்க்க வேண்டும்.

வார்ம் ஸ்கின் டோன் கொண்டவர் என்றால், சூரிய வெப்பம் தாக்கும் கூடு உங்கள் சருமம் சிவந்து போகும்.

கூல் ஸ்கின் டோன் கொண்டவர் என்றால், சூரிய ஒளியால் உங்கள் சருமம் கருத்துப் போகும், அதாவது tan ஆகும். இதன் அடிப்படையில் நீங்கள் ஹேர் கலரைத் தேர்வு செய்யலாம்.

இந்தியர்களைப் பொறுத்தவரை தங்கள் சருமத்துக்கு, அழகாகவும் நேர்த்தியாகவும் பொருத்தமாக இருக்கும் ஹேர் கலர்களை தேர்வு செய்ய வேண்டும். எதிர்மாறான நிறத்தை தேர்வு செய்யக்கூடாது. எனவே உங்களுக்கு வெளிர் நிற சருமம் இருந்தால் தங்கம் அல்லது சாம்பல் நிற ஷேடுகளை பயன்படுத்தக் கூடாது.

கூந்தலின் முனை முடியை அடிக்கடி வெட்டுவதால் வேகமாக வளருமா..? உண்மை இதுதான்..!

பிரவுன்/பர்கண்டி நிறம்:

இந்தியர்களின் அனைத்து விதமான சரும நிறங்களுக்கும் மற்றும் காம்ப்ளக்ஷன்களுக்கும் பிரௌன் மற்றும் பர்கண்டி நிறங்களுக்கும் அனைத்து ஷேடுகளும் கச்சிதமாக பொருந்தும்.

சிவப்பு நிறம்:

சிவப்பு நிற ஹேர் கலர் பல ஷேடுகளில் வருகின்றன. எனவே உங்கள் சருமத்திற்கு பொருத்தமான சிவப்பு நிறத்தை தேர்ந்தெடுப்பது மிகவும் கடினம். உங்களுக்கு வெள்ளை நிற சருமம் இருந்தால் வெளிர் சிவப்பு, காப்பர் சிவப்பு ஆகிய இரண்டு நிறங்களையும் தேர்வு செய்யலாம். பொதுவாக நீலம் அடிப்படையிலான சிவப்பு நிற ஹேர்கலரைஆலிவ் நிற சருமம் உள்ளவர்கள் தேர்வு செய்யலாம்.

hair 3 1

தங்க நிறம்:

ப்ளான்டே என்று கூறப்படும் தேன் அல்லது தங்க நிற கூந்தல் பொதுவாக இந்திய ஸ்கின் டோனுக்கு பொருந்தாது. ஆனால் நீங்கள் தங்கம் மற்றும் மஞ்சள் நிறம், பிரவுன் ஆகிய வார்மான டோன்களைப் பயன்படுத்தலாம். அதாவது அடர் தங்கம் அல்லது பிரௌன் நிறத்துடன் மஞ்சள் கலரிங்கை அன்டர்டோனாக பயன்படுத்தலாம்.

செஸ்ட்நட் பிரவுன்:

சிவப்பு மற்றும் அடர் பிரவுன் ஆகிய இரண்டு நிறங்களின் கச்சிதமான கலவை தான் செஸ்ட்-நட் பிரவுன். பெரும்பாலான இந்திய சருமங்களுக்கு இந்த நிறம் பொருத்தமாக இருக்கும். மட்டுமில்லாமல் இது இயற்கையான நிறமாகவும் தோற்றமளிக்கும். உங்கள் கூந்தல் கலரை நீங்கள் முற்றிலுமாக மாற்ற விரும்பாமல் இருந்தால் இந்த ஷேடைத் தேர்வு செய்யலாம்.

இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரையிலான செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.Source link

Please follow and like us:
icon Follow en US
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube