இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ilayaraja music maestero Ilaiyaraajas: தமிழ் சினிமாவின் இசை பொக்கிஷம்.. இளையராஜா பிறந்தநாள் ஸ்பெஷல்!


நூற்றாண்டு கண்ட தமிழ் சினிமாவில் தனக்கென தனி சகாப்தத்தை உருவாக்கி இசை ராஜாங்கம் நடத்தி வரும் இளையராஜாவின் பிறந்த நாளான இன்று அவரது கோரஸ் பாடல்கள் பற்றிய சிறப்பு பதிவு.

தன் முதல் திரைப்படமான ‘அன்னக்கிளி’யிலேயே ‘சுத்த சம்பா பச்ச நெல்லு குத்தத்தான் வேணும்’ என்ற பாடலில் பெண்களின் கோரஸை வைத்து இசையில் கோலம் போட்டிருந்தார் இளையராஜா. .

பாலிவுட் ஹீரோக்களை திட்டிய மாதவன்.. அவார்ட் விழாவில் நடந்த சுவாரசியம்- பழைய வைரல் வீடியோ

முள்ளும் மலரும் திரைப்படத்தில் வரும் ‘ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்’ ‘என் உயிர் தோழன்’ திரைப்படத்தில் வரும் ‘ஏ ராசாத்தி ராசாத்தி;, பாடல், ‘நாடோடி தென்றல்’ திரைப்படத்தில் வரும் ‘யாரும் விளையாடும் தோட்டம்’ உள்ளிட்ட பல பாடல்களில் கோரசால் மனம் நிறைய வைத்தார்.

‘புது நெல்லு புது நாத்து’ திரைப்படத்தில் ‘உசுரே உனக்காகத்தான் படைச்சானே சாமிதான்; என சுகன்யா பாட தொடர்ந்து கோரஸ் குரலும் ‘உசுரே உனக்காகத்தான் படைச்சானே சாமிதான்’ என பாடுவது ரசிகனின் காதல் மனதை உருக வைத்தது என சொன்னால் அது மிகையில்லைதான்.

காதல் தூதுகளுக்கும் தன் கோரசல் பூச்சரம் தொடுத்தவர் இளையராஜா… ஆம். ‘கோபுர வாசலிலே’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘தேவதை போல் ஒரு பெண் இங்கு வந்தது நம்பி உன்னை நம்பி’ பாடலில் அந்த மாயாஜாலத்தை செய்திருப்பார் இந்த கோரஸ் ராஜா.

உயிரின் உயிரே, அண்டங்காக்கா கொண்டக்காரி உள்ளிட்ட பாடல்களைப் பாடிய பாடகர் கே.கே திடீர் மரணம்- பிரதமர் இரங்கல்

1989 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ‘புது புது அர்த்தங்கள்’. படத்தின் ஆரம்ப காட்சியில் டைட்டில் காட்சியில் இளையராஜா ஒரு பாடலை கம்போஸ் செய்வது போல் வரும். அந்த காட்சியில் ‘அந்த கோரஸ் செக்சன் மட்டும் இன்னொரு தடவை குடுங்க’ என இளையராஜா சொல்வார். அதற்கு வயலின் இசை கலைஞராக வரும் ஜனகராஜ் ‘அடடே இன்னைக்கு கோரஸ் வேற உண்டா’ என சொல்வார். இப்படி ஜனகராஜ் சொல்வது ரசிகனின் மனசாட்சியாகவே அப்போது பார்க்கப்பட்டது

காதல், காமம் ,கோபம், விரக்தி என எதுவாக இருந்தாலும் தன் அலாதியான பாடல்களில் கோரஸ் குரல்களை பயன்படுத்தி பல கோடி இதயங்களை வென்றவர் இந்த ராஜாதி ராஜா இளையராஜா.

@ Google செய்திகளைப் பின்தொடரவும்: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.Source link

Please follow and like us:
icon Follow en US
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube