‘உயிரின் உயிரே’ மறைந்துவிட்டார் என்று பாடகர் கேகே மறைவையொட்டி இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் உருக்கமாக புழஞ்சலி செலுத்தியுள்ளார்.
இது தொடர்பாக இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், ”என் ‘உயிரின் உயிரே’ மறைந்துவிட்டார். லெஜண்ட் படத்தில் கடைசியாக அவர் பாடிய பாடலான ‘கொஞ்சி கொஞ்சி’ பாடலை உலகமே புகழ்ந்து கொண்டிருக்கும்போது, இப்படியொரு அதிர்ச்சியான செய்தியைக் கேட்டு நான் முற்றிலும் உடைந்து போயிருக்கிறேன்.
அவருடைய குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
என் “உயிரின் உயிரே” மறைந்தது. RIP பாடகர் கே.கே. அவருடைய கடைசிப் பாடலான “கொஞ்சி கொஞ்சி” பாடலை உலகமே புகழ்ந்து கொண்டிருக்கும் போது, அதிர்ச்சியான செய்தியைக் கேட்பது. நான் முற்றிலும் உடைந்து போயிருக்கிறேன், அவருடைய குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். @jdjeryofficial @thinkmusicindia @SonyMusicSouth
– ஹாரிஸ் ஜெயராஜ் (@Jharrisjayaraj) மே 31, 2022
பிரபல பின்னணி பாடகரான கேகே என அழைக்கப்படும் கிருஷ்ணகுமார் குன்னத் நேற்றிரவு கொல்கத்தாவில் நடைபெற்ற கல்லூரி கலாசார விழாவில் பங்கேற்றார். அப்போது அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. தொடர்ந்து தான் தங்கியிருந்த விடுதிக்கு திரும்பினார். அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்ததால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. அவரது திடீர் மறைவுக்கு காரணம் மாரடைப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.