சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் – News18 Tamil


தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவது உண்மை என்றும் ஒரு கோடிக்கும் அதிகமானோர் உரிய நேரத்தில் இரண்டாவது டோஸ் தடுப்பூசியை செலுத்தவில்லை என்றும் சுகாதார துறை  செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை போல்  தமிழகத்திலும் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 144 பேருக்கு கொரோனா தொற்று பதிவானது. அதற்கு முந்தைய நாளில் இந்த எண்ணிக்கை 90 ஆக மட்டுமே இருந்தது. சென்னையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 48-ல் இருந்து 82-ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், இந்தியாவிலேயே கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. 2 ஆயிரத்துக்கு கீழ் இருந்தது,தற்போது 5 ஆயிரம் என்று உயர்ந்துள்ளது.

ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி இளைஞர் மேம்பாட்டு மையத்தில் 29 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. 245 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. BA4, BA5, ஒமைக்ரான் வகை கொரோனா ஜனவரி மாதத்தில் தெற்கு ஆப்பிரிக்காவில் ஐந்தாவது அலை ஏற்படுத்தியது. தற்போது BA4, BA5 வகை தமிழ்நாட்டில் உறுதியாகி வருகிறது.

இதை படிக்க: கொரோனா காலத்தில் 511 பள்ளி மாணவிகளுக்கு திருமணம்.. பள்ளிக் கல்வித்துறை ஆய்வில் அதிர்ச்சி தகவல்

தமிழ்நாட்டில் 94% பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளனர். ஒரு கோடிக்கும் மேலானவர்கள் உரிய நேரத்தில் இரண்டாவது தவணை தடுப்பூசியை செலுத்தவில்லை. தமிழ்நாட்டில் கொரோனா தொற்று அதிகமாகி வருகிறது என்பது உண்மை என தெரிவித்தார்.

இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.Source link

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube