டூவீலரில் பின்னால் அமர்பவருக்கும் ஹெல்மெட் கட்டாயம்! சென்னையில் 12 நாட்களில் வசூலான அபராதம் எவ்வளவு தெரியுமா?

இந்தியாவில் நடைபெறும் இரு சக்கர வாகன விபத்துக்களில் தினமும் பலர் உயிரிழந்து வருகின்றனர். இதற்கு இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும் பலர் ஹெல்மெட் அணியாததுதான் முக்கியமான காரணமாக உள்ளது. ஹெல்மெட் அணிந்திருந்தால், விபத்துக்களில் சிக்கினாலும் கூட, தலையில் காயம் ஏற்படாமல் பாதுகாத்து கொள்ள முடியும். இதன் மூலம் உயிரிழப்பையும் தடுக்கலாம்.

டூவீலரில் பின்னால் அமர்பவருக்கும் ஹெல்மெட் கட்டாயம்! சென்னையில் 12 நாட்களில் வசூலான அபராதம் எவ்வளவு தெரியுமா?

ஆனால் பலர் இதை பொருட்படுத்துவதே கிடையாது. ஹெல்மெட் அணியாமல் அலட்சியம் காட்டுகின்றனர். இந்தியாவில் அமலில் உள்ள விதிமுறைகளின்படி, இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும் இரண்டு பேருமே கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும். ஆனால் இரு சக்கர வாகனத்தை ஓட்டுபவர் ஹெல்மெட் அணிவதே பெரிய விஷயமாக உள்ளது.

டூவீலரில் பின்னால் அமர்பவருக்கும் ஹெல்மெட் கட்டாயம்! சென்னையில் 12 நாட்களில் வசூலான அபராதம் எவ்வளவு தெரியுமா?

இரு சக்கர வாகனங்களின் பின்னால் அமர்ந்து செல்லும் பலரும் ஹெல்மெட் அணிவது கிடையாது. இந்த சூழலில் சென்னை போக்குவரத்து காவல் துறையினர் சமீபத்தில் அதிரடி உத்தரவு ஒன்றை வெளியிட்டனர். இதன்படி இரு சக்கர வாகனங்களை ஓட்டுபவர்களுடன், பின்னால் அமர்ந்து செல்பவர்களும் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும்.

டூவீலரில் பின்னால் அமர்பவருக்கும் ஹெல்மெட் கட்டாயம்! சென்னையில் 12 நாட்களில் வசூலான அபராதம் எவ்வளவு தெரியுமா?

இந்த விதிமுறையை மீறினால் அபராதம் விதிக்கப்படும் எனவும் சென்னை போக்குவரத்து காவல் துறை அறிவித்தது. கடந்த மே 23ம் தேதியில் இருந்து இந்த விதிமுறை தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சூழலில் இந்த விதிமுறை அமலுக்கு வந்ததில் இருந்து, 12 நாட்களில் ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்தவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்ற தகவல் தற்போது தெரியவந்துள்ளது.

டூவீலரில் பின்னால் அமர்பவருக்கும் ஹெல்மெட் கட்டாயம்! சென்னையில் 12 நாட்களில் வசூலான அபராதம் எவ்வளவு தெரியுமா?

அதாவது கடந்த மே 23ம் தேதியில் இருந்து ஜூன் 3ம் தேதி வரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த தகவல்கள் கிடைத்துள்ளது. இதன்படி சென்னையில் கடந்த 12 நாட்களில், ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனங்களை ஓட்டிய 21,984 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனங்களின் பின்னால் அமர்ந்து பயணம் செய்த 18,035 பேர் மீது காவல் துறையினர் அதிரடியாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.

டூவீலரில் பின்னால் அமர்பவருக்கும் ஹெல்மெட் கட்டாயம்! சென்னையில் 12 நாட்களில் வசூலான அபராதம் எவ்வளவு தெரியுமா?

அத்துடன் இவர்களிடம் இருந்து எவ்வளவு ரூபாய் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது? என்ற தகவலும் கிடைத்துள்ளது. இதன்படி ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனங்களை ஓட்டியவர்களிடம் இருந்து 21.98 லட்ச ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனங்களின் பின்னால் அமர்ந்து சென்றவர்களிடம் இருந்து 18 லட்ச ரூபாய் அபராதமாக வசூல் செய்யப்பட்டுள்ளது.

டூவீலரில் பின்னால் அமர்பவருக்கும் ஹெல்மெட் கட்டாயம்! சென்னையில் 12 நாட்களில் வசூலான அபராதம் எவ்வளவு தெரியுமா?

இந்த தகவல்களை சென்னை போக்குவரத்து காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். வரும் நாட்களில் ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்பவர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் தீவிரமடைவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. எனவே இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்பவர்கள் ஹெல்மெட் அணிந்து தங்கள் பயணத்தை மேற்கொள்வது சிறந்தது.

டூவீலரில் பின்னால் அமர்பவருக்கும் ஹெல்மெட் கட்டாயம்! சென்னையில் 12 நாட்களில் வசூலான அபராதம் எவ்வளவு தெரியுமா?

இதன் மூலம் காவல் துறையினரின் அதிரடி நடவடிக்கைகளில் இருந்து தப்பித்து கொள்ளலாம். அத்துடன் ஒருவேளை எதிர்பாராத விதமாக சாலை விபத்துக்களில் சிக்க நேரிட்டால், ஹெல்மெட் உயிரையும் காப்பாற்றும். எனவே இரு சக்கர வாகனங்களில் பயணிப்பவர்கள் சிரமம் பார்க்காமல் ஹெல்மெட் அணிந்து கொள்வது நன்மை பயக்கும்.

டூவீலரில் பின்னால் அமர்பவருக்கும் ஹெல்மெட் கட்டாயம்! சென்னையில் 12 நாட்களில் வசூலான அபராதம் எவ்வளவு தெரியுமா?

சென்னை மட்டுமல்லாது, மும்பை போக்குவரத்து காவல் துறையினரும், இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும் இருவரும் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற அதிரடி உத்தரவை வெகு சமீபத்தில் பிறப்பித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே சென்னையை போல் அங்கும் ஹெல்மெட் அணியாமல் பயணிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

டூவீலரில் பின்னால் அமர்பவருக்கும் ஹெல்மெட் கட்டாயம்! சென்னையில் 12 நாட்களில் வசூலான அபராதம் எவ்வளவு தெரியுமா?

இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும்போது ஹெல்மெட் அணிவதுடன், கார்களில் பயணம் செய்யும்போது சீட் பெல்ட் அணிவது, குடிபோதையில் வாகனம் ஓட்டுவதை தவிர்ப்பது, அதிவேகத்தில் வாகனத்தை இயக்காமல் இருப்பது போன்ற போக்குவரத்து விதிமுறைகளையும் முறையாக பின்பற்றினால், இந்தியாவில் சாலை விபத்துக்கள் மற்றும் சாலை விபத்துக்களால் ஏற்பட்டு வரும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை வெகுவாக குறையும்.

Note: Images used are for representational purpose only.

Source link

Please follow and like us:
icon Follow en US
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube