விண்ணப்பிக்க முழு விவரங்கள் இதோ – News18 Tamil


Palanimurugan Hrce: பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் மருந்தாளுனர் காலிப் பணிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. சித்த மருத்துவத்தில் பட்டயப்படிப்பு முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

பணியிடத்தின் பெயர் ஒப்பந்தம் ஊதியம் மாதம் ஒன்றுக்கு காலியிடம் கல்வி தகுதி
மருந்தாளுனர் (சித்தா) ரூ. 15000 3 சித்த மருத்துவத்தில் பட்டயப்படிப்பு முடித்திருக்க வேண்டும் (தமிழ்நாடு எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்டது)

முக்கியமான நாட்கள்: 08.07.2022 மாலை 5.45 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:

இணை ஆணையர்/செயல் அலுவலர்

அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில்,

பழனி – 624601

திண்டுக்கல் மாவட்டம்.

நிபந்தனைகள்:

விண்ணப்பதாரர் இந்து மதத்தை சார்ந்தவராகவும். தமிழ்நாட்டை சார்ந்தவராகவும் இருக்கவேண்டும்.

விண்ணப்பதாரர் மே 2022ம் மாதம் முதல் தேதியன்று 35 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர் உடல் ஆரோக்கியம் உடையவராக இருக்க வேண்டும்.

இப்பணியானது முற்றிலும் தற்காலிகமானது. இப்பணிக்கான பணியாணை ஒப்பந்த அடிப்படையிலேயே வழங்கப்படும்.

இப்பணியானது முற்றிலும் ஒப்பந்த அடிப்படையில் இப்பணியினை மேற்கோள்காட்டி இத்திருக்கோயில் பணி நியமனங்களுக்கு எந்த முன்னுரிமையும் கோரக்கூடாது.

பணியாணை பெறப்பட்ட நபர் ரூ.100/-க்கான ஒப்பந்தப்பத்திரத்தில் ஒப்பந்தம் மேற்கொண்டு பணி ஏற்பு செய்ய வேண்டும்.

நீதிமன்றத்தில் தண்டனை பெற்றவர்கள், பட்ட கடனை முடியாதவர்கள் என நீதிமன்றத்தில் தீர்மானிக்கப்பட்டவர்கள், அரசுப் பணியில் இருந்தும், பொது ஸ்தாபனத்தில் இருந்தும், இடைத் திருக்கோயிலில் இருந்தும் பணிபுரிந்து தண்டனை நீக்கம் செய்யப்பட்டவர்கள் இத்திருக்கோயிலுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவர்கள், அவர்களின் வாரிசுதாரர்கள் ஆகியோர் நீதிமன்றத் தீர்ப்பிற்கு விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள்.

விண்ணப்பதாரர் நன்னடத்தை உடையவராக இருத்தல் வேண்டும். இதற்குத் தகுதி பெற்ற அரசிதழ் பதிவு பெற்ற அலுவலரிடம் (Gazelled Officer) பெறப்பட்ட நன்னடத்தை சான்று நகலினை விண்ணப்பத்துடன் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

போலி செய்திகளை மாணவர்கள் நம்ப வேண்டாம்: அண்ணா பல்கலைக்கழகம் எச்சரிக்கை

இந்த வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்படும் தேதிக்கு முன்னதாக வரும் விண்ணப்பங்களும், 08.07.2022 தேதி மாலை 5.45 மணிக்கு பின்னர் வரும் விண்ணப்பங்களும் பரிசீலிக்கப்படாது.

விண்ணப்பிக்கும் பதவிக்குரிய கல்வி மற்றும் இதர தகுதி சான்றுகளின் சான்றிட்ட நகல்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்

விண்ணப்பதாரர் விண்ணப்பம் அனுப்பப்படும் மேலுறையின் மீது கண்டிப்பாக பதவியின் பெயர் மற்றும் கைபேசி எண் குறிப்பிட்டு அனுப்பப்பட வேண்டும்.

வரப்பெறும் விண்ணப்பங்கள் அனைத்தும் பரிசளிக்கப்பட்டு தகுதியுள்ள நபர்களுக்கு மட்டுமே நேர்முகத் தேர்விற்கு அழைப்பு அனுப்பப்படும்.

நேர்முக தேர்விற்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரருக்கு பயணப்படி ஏதும் வழங்கப்பட மாட்டாது.

சமூகத்தின் அன்றாட பிரச்சனைகளைத் தீர்க்க ஆர்வமா? ரூ.1 கோடி வரை மானியம்

நேர்முகத் தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்ட நபரை / நபர்களை எந்த காரணங்களும் கூறாது நிராகரிக்க திருக்கோயில் நிவோகத்திற்கு உரிமை உண்டு

தேர்வு செய்யப்படும் நபருக்கு சென்னை இந்து சமய அறநிலையத்துறை ஆணையாளரின் அங்கீகாரத்திற்கு பின்பே பணி ஆணை வழங்கப்படும்.

விண்ணப்பதாரர் விண்ணப்பங்களுடன் அனுப்பப்படும் அணைத்து சான்றிதழ்களும் அரசிதழ் பதிவு பெற்ற அலுவலரிடம் (அரசு வர்த்தமானி) சான்றொப்பம் பெறப்பட்ட புகைப்பட நகல்களாக மட்டுமே இருக்க வேண்டும். எக்காரணத்தை கொண்டு அசல் சான்றிதழ்களை அனுப்ப கூடாது.

விண்ணப்பதாரர் அசல் சான்றிதழ்கள் அனைத்தும் நேர்முகத் தேர்விற்கு அழைக்கும் போது எடுத்து வர வேண்டும்.

விண்ணப்பப்படிவத்தில் விண்ணப்பதாரர்கள் புகைப்படம் ஒட்டப்பட்டு அதில் அரசிதழ் பதிவு பெற்ற அலுவலரிடம் மேலொப்பம் பெறப்பட வேண்டும்.

விண்ணப்படிவம், தகுதிகள் மற்றும் நிபந்தனைகளை இத்திருக்கோவில் அலுவலகத்தில் நேரில், https://palanimurugan.hrce.tn.gov.in/, https://hrce.tn.gov.in/hrcehome/index.php என்ற திருக்கோயில் இணையத்தளத்திலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள் இந்த இணைப்பை கிளிக் செய்யவும்

இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரையிலான செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.Source link

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube