இந்திய பொருளாதாரத்தில் கவனிக்க வேண்டிய முக்கிய தலைப்புகள் இதோ – News18 Tamil


TNPSC தேர்வுக்கான தயாரிப்பு: குரூப் 1 பதவிக்கான முதல்நிலைத் தேர்வு வரும் நவம்பர் 19ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் இந்திய பொருளாதாரத்தில் அதிக எண்ணிக்கையிலான கேள்விகள் இடம் பெறுவது வழக்கம். தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் பலனைடையும் வகையில் இந்தியப் பொருளாதாரத்தில் தனியார்மயம்(Disinvestment) தொடர்பான சமீபத்திய நிகழ்வுகள் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்(எஸ்எஸ்சி), வங்கிப் பணியாளர் தேர்வாணையம் (ஐபிபிஎஸ்), ரயில்வே வாரியத் தேர்வுகள் (ஆர்ஆர்பி), யுபிஎஸ்சி போன்ற போட்டித் தேர்வு மாணவர்களுக்கு இந்தத் தலைப்பு மிகவும் பயனுள்ளதாக அமையும்.

செய்தி: துணை நிறுவனங்களை மூட பொது துறை நிறுவனத்துக்கு அனுமதி:

ஒரு பொதுத்துறை நிறுவனம் அதன் அல்லது கிளை பிரிவுகளை மூடுவதற்கு அல்லது அவற்றின் பங்குகளை விற்பனை செய்வதற்கோ பொதுத்துறை நிறுவன இயக்குநர்கள் குழுவுக்கு கூடுதல் அதிகாரம் அளித்து மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

தற்போதைய விதிமுறைகளின்படி மகரத்னா, நவரத்னா, மற்றும் மினிரத்னா வகையைச் சேர்ந்த பொதுத்துறை நிறுவனங்களின் இயக்குநர்கள் குழு, அந்தந்த நிறுவனங்களின் பங்கு முதலீடு மூலம் நிதி ரீதியான கூட்டு முயற்சிகளை மேற்கொள்ளவும், துணை நிறுவனங்களை ஒருங்கிணைக்கவும் அல்லது அவற்றைக் கையகப்படுத்தவும் குறிப்பிட்ட சில அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. எனினும், பங்கு விலக்கல் அல்லது துணை நிறுவனங்களை மூடுவதற்கு தேவையான அதிகாரம் இல்லை.

தொடர்புடைய செய்திகள்:

முன்னதாக, அரசு பொதுத் துறை நிறுவனங்களில் உத்தியுடன் கூடிய தனியார்மயக் கொள்கைக்கு (மூலோபாய முதலீட்டுக்கான புதிய கொள்கை) மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.

பிபிசிஎல், ஏர் இந்திய, ஐடிபிஐ வங்கி, இந்திய கப்பல் கழகம், ரயில்வே துறையின் சரக்குப் பெட்டகக் கழகம் (கன்டெய்னர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா), பாதுகாப்பு துறையின் பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட், பவன் ஹான்ஸ் நிறுவனம், ஆயுள் காப்பீட்டுக் கழகம் ஐபிஓ,நீலச்சல் இஸ்பத் நிகாம் லிமிடெட் (NINL) ஆகிய பொதுத் துறை நிறுவனங்களின் பங்கு விற்பனை மற்றும் நிர்வாக கட்டுப்பாடு மாற்றத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.

ஏர் இந்திய நிறுவனம் விற்பனை: முன்னதாக, கடன் சுமையில் இருந்து வந்த ஏர் இந்திய நிறுவனத்தை மத்திய அரசு விற்றது. டாடா சான்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான டாலஸ் நிறுவனத்திடம் இருந்து ரூ. 2700 கோடியை அரசு பெற்றுக் கொண்டது. மேலும், ஏர் இந்தியா மற்றும் ஈஐஎக்ஸ்எல்-லின் மொத்தக் கடனில் (61 ஆயிரம் கோடி) ரூ,15,300 கோடி கடன் அளவை டாட்டா நிறுவனம் ஏற்றுக்கொண்டது.

இதையும் வாசிக்க: TNPSC, IPBS உள்ளிட்ட போட்டித் தேர்வுகளை நீங்கள் எழுதுவீர்களா? இந்த செய்தி உங்களுக்கு தான்

ஏர் இந்தியா மற்றும் அதன் துணை நிறுவனமான ஈஐஎக்ஸ்எல் -ன் (AIXL) 100% பங்குகள் மற்றும் ஈஐஎஸ்ஏடிஏஎஸ்-ன் (AISATS) 50% பங்குகள் டாட்டா நிறுவனத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

எல்ஐசி பங்குகள் விற்பனை (எல்ஐசி ஐபிஓ): இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் 3.5 பங்குகளை பொது மக்களுக்கு விற்பனை செய்தது. இதன் மூலம் தற்போதைய பங்கு வெளியீட்டின் மதிப்பு ஏறத்தாழ 21 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:Source link

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube