நயன்தாராவை கரம்பிடித்த விக்னேஷ் சிவன்: திருமண நிகழ்வின் ஹைலைட்ஸ் | நயன்தாரா விக்னேஷ்சிவன் திருமணம் சென்னையில் நடைபெற்றது


விக்னேஷ் சிவன் – நயன்தாரா திருமணம் சென்னையில் பிரபலங்கள் சூழ பிரம்மாண்டமாக நடைபெற்றது.

‘நானும் ரவுடிதான்’ படத்திலிருந்து நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் காதலிக்க தொடங்கினர். ஏறக்குறைய 6 வருடங்களாக காதலித்துவந்தவர்கள், இன்று மணமுடிக்க திட்டமிட்டனர். முன்னதாக திருப்பதியில் நடைபெறவிருந்த அவர்களின் திருமணம் பல்வேறு காரணங்களால் சென்னைக்கு மாற்றப்பட்டது. அந்தவகையில் சென்னை மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் திருமணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மேலும், விக்னேஷ் சிவன் – நயன்தாரா திருமணத்திற்காக பிரம்மாண்டமாக விசேஷ கண்ணாடி மாளிகை போன்று அரங்கு அமைக்கப்பட்டிருந்தது. பிரபலங்கள் கலந்துகொண்ட அவர்களின் திருமணம் 7.30 மணிக்கு தொடங்கியது. சரியாக இன்று காலை 10.20 மணி அளவில் நயன்தாராவுக்கு தாலி கட்டினார் விக்னேஷ் சிவன். இது தவிர, அரங்குக்குள் செல்பவர்கள் செல்போன் எடுத்து செல்லக் கூடாது போன்ற பலத்த கட்டுப்பாடுகளுக்கு நடுவே திருமணம் நடைபெற்றது.

16547556973078

இந்த நிகழ்வு நெட்ஃப்ளிக்ஸ் தளத்துக்காக பிரத்யேகமாக பதிவு செய்யப்படுவதால் செல்போன் கேமிராக்களில் ஸ்டிக்கர் ஒட்டி அனுமதிக்கப்பட்டது. ரிசார்டின் பின்புறம் உள்ள கடற்கரைக்குச் செல்லவும் தடுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

16547557253078

விக்னேஷ் சிவன் – நயன்தாரா திருமணத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான், இயக்குநர் மணிரத்னம், சரத்குமார், விஜய் சேதுபதி, கார்த்தி, இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், அட்லி, நெல்சன், பொன்வண்ணன், கேரள நடிகர் திலீப், மோகன்ராஜா, பொன்வண்ணன், கலா மாஸ்டர், ரெபா மோனிகா ஜான், புகைப்படக்கலைஞர் சிற்றரசு, தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, போனிகபூர், கார்த்தி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

16547566473078

திருமண விருந்தில், பன்னிர் பட்டாணிக்கறி, பருப்புக் கறி,அவியல், மோர் குழம்பு, மிக்கன் செட்டிநாடு கறி, உருளை கார மசாலா, வாழைக்காய் வருவல், சென்னா கிழங்கு வருவல், சேப்பக்கிழங்கு புளிக்குழம்பு, காளான் மிளகு வறுவல், கேரட் பொரியல், பிரிசாப் பழம், பலாப் பழம் பூண்டு மிளகு ரசம், தயிர், வெஜிடபுள் ரைதா, வடகம், ஏலக்காய் பால், பாதாம் அல்வா, இளநீர் பாயாசம், ஐஸ்கிரீம் உள்ளிட்டவை பரிமாறப்பட்டன.

இதனிடையே, விக்னேஷ் சிவன் – நயன்தாரா திருமணத்தையொட்டி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று 1 லட்சம் பேருக்கு திருமண விருந்து வழங்கப்பட உள்ளது. ஆதரவற்றோர், முதியோர் இல்லங்கள், திருவண்ணாமலை உள்ளிட்ட முக்கிய கோயில்களில் விருந்தை வழங்க நட்சத்திர தம்பதிகள் ஏற்பாடு செய்தனர்.





Source link

Please follow and like us:
icon Follow en US
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube