எத்தனை ரோல்ஸ்-ராய்ஸ் காரை தாங்க இவர் வாங்குவாரு!! அம்பானியின் கேரஜில் இணைந்த 3வது கல்லீனன்!

இந்தியாவில் இருக்கும் எவரொருவருக்கும் முகேஷ் அம்பானியை பற்றி தெரியாமல் இருக்காது என்றே நினைக்கிறேன். ஏனெனில் அந்த அளவிற்கு பல்வேறு தொழில்துறைகளில் கால்பதித்துள்ள இவர் இந்தியா முழுவதுமுள்ள பல முக்கிய பிரபலங்களுக்கு பரீட்சையமானவராக விளங்குகிறார். அதேநேரம் சொகுசு கார்களை வாங்கி குவிப்பதிலும் ஆர்வமிக்கவராக முகேஷ் அம்பானி விளங்குகிறார்.\

எத்தனை ரோல்ஸ்-ராய்ஸ் காரை தாங்க இவர் வாங்குவாரு!! முகேஷ் அம்பானியின் கேரஜில் இணைந்த 3வது கல்லீனன்!

இதற்கு உதாரணமாக அம்பானி வாங்கிய புதிய லக்சரி கார்கள் பலவற்றை நமது செய்தித்தளத்தில் கூட பார்த்துள்ளோம். இதில் பெரும்பான்மையான கார்கள் இந்தியாவில் தயாரிக்கப்படாமல் நேரடியாக வெளிநாட்டில் இருந்து சிபியூ முறையில் இறக்குமதி செய்யப்பட்டவைகளாக விளங்குகின்றன. இத்தகைய கார்களுக்கு இறக்குமதி வரி மிகவும் அதிகம்.

எத்தனை ரோல்ஸ்-ராய்ஸ் காரை தாங்க இவர் வாங்குவாரு!! முகேஷ் அம்பானியின் கேரஜில் இணைந்த 3வது கல்லீனன்!

இந்த நிலையில் தற்போது ஆட்டோமொபைலி அர்டெண்ட் என்கிற ஃபேஸ்புக் பக்கத்தின் மூலம் கிடைத்துள்ள தகவலின்படி, முகேஷ் அம்பானி மற்றுமொரு ரோல்ஸ்-ராய்ஸ் கல்லீனன் காரை டெலிவிரி பெற்றுள்ளார். இது முகேஷ் அம்பானியின் கேரேஜில் இணைத்திருக்கும் 3வது ரோல்ஸ்-ராய்ஸ் கல்லீனன் கார் ஆகும். இதுதொடர்பாக இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்டுள்ள வீடியோவினை கீழே காணலாம்.

முகேஷ் அம்பானியின் புதிய ரோல்ஸ்-ராய்ஸ் கல்லீனன் காரின் மதிப்பு ரூ.13.14 கோடி என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலமாக இந்தியாவில் தனிநபர் ஒருவர் வைத்திருக்கும் மிகவும் விலையுயர்ந்த காராக இது பார்க்கப்படுகிறது. முகேஷ் அம்பானி இந்த காரை கடந்த ஜனவரி 31ஆம் தேதி முன்பதிவு செய்துள்ளார். உண்மையில் இந்தியாவில் ரோல்ஸ்-ராய்ஸ் கல்லீனன் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.6.58 கோடி மட்டுமே ஆகும்.

எத்தனை ரோல்ஸ்-ராய்ஸ் காரை தாங்க இவர் வாங்குவாரு!! முகேஷ் அம்பானியின் கேரஜில் இணைந்த 3வது கல்லீனன்!

ஆனால் முகேஷ் அம்பானி தனது புதிய கல்லீனன் காரில் ஏகப்பட்ட தனிப்பயனாக்க மாற்றங்களுக்கு ஆர்டர் கொடுத்துள்ளார். ரோல்ஸ்-ராய்ஸ் நிறுவனம் தனது கார்களுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட தனிப்பயனாக்க தேர்வுகளை வழங்குகிறது. இதனால்தான் முகேஷ் அம்பானியின் புதிய கல்லீனன் காரின் விலை ரூ.13 கோடியை தாண்டி சென்றுள்ளது.

Image Courtesy: Automobili Ardent

எத்தனை ரோல்ஸ்-ராய்ஸ் காரை தாங்க இவர் வாங்குவாரு!! முகேஷ் அம்பானியின் கேரஜில் இணைந்த 3வது கல்லீனன்!

குறிப்பாக, பிரத்யேக டஸ்கன் சன் பெயிண்ட்டிற்காக மட்டுமே ரூ.1 கோடி வரையில் செலவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பளபளப்பான ஆரஞ்ச் நிறத்தில் இருக்கும் டஸ்கன் சன் பெயிண்ட் ஆனது கல்லீனன் காருக்கு நிலையான பெயிண்ட் தேர்வாக வழங்கப்படுவதில்லை. கூடுதல் தொகையுடன், விருப்பப்படும் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யக்கூடியதாகவே விளங்குகிறது.

எத்தனை ரோல்ஸ்-ராய்ஸ் காரை தாங்க இவர் வாங்குவாரு!! முகேஷ் அம்பானியின் கேரஜில் இணைந்த 3வது கல்லீனன்!

இந்த உதிக்கும் சூரியனின் ஆரஞ்ச் நிறத்தில் ரோல்ஸ்-ராய்ஸ் கல்லீனன் உலகின் எந்தவொரு மூலையிலும் காண்பது அரிது என கூறப்படுகிறது. ஒரேயொரு வாடிக்கையாளர் மட்டும் அபுதாபியில் உள்ளாராம். பிரத்யேக பெயிண்ட்டை போன்று முகேஷ் அம்பானியின் புதிய கல்லீனன் காரின் நம்பர் ப்ளேட்டும் சிறப்புமிக்கதாக விளங்குகிறது. ஏனெனில் தனது புதிய கல்லீனன் காருக்கு 0001 என்கிற பதிவு எண்ணை முகேஷ் அம்பானி பெற்றுள்ளார்.

எத்தனை ரோல்ஸ்-ராய்ஸ் காரை தாங்க இவர் வாங்குவாரு!! முகேஷ் அம்பானியின் கேரஜில் இணைந்த 3வது கல்லீனன்!

வழக்கமான விஐபி வாகன பதிவு எண்ணிற்கு வாகன பதிவு துறை சார்பில் ரூ.4 லட்சம் கட்டணமாக பெறப்படுவது வழக்கம். ஆனால் முகேஷ் அம்பானி கேட்ட எண்ணின் வரிசையில் அனைத்து பதிவெண்களும் ஏற்கனவே பெறப்பட்டுவிட்டன. பின்னர் சம்பந்தப்பட்ட வாகன பதிவு அலுவலர் இதுதொடர்பாக போக்குவரத்து ஆணையரிடம் அனுமதி பெற்று பதிவெண்ணை வழங்கியுள்ளார்.

எத்தனை ரோல்ஸ்-ராய்ஸ் காரை தாங்க இவர் வாங்குவாரு!! முகேஷ் அம்பானியின் கேரஜில் இணைந்த 3வது கல்லீனன்!

இதனாலேயே ‘0001’ எண்ணிற்காக வழக்கத்தை காட்டிலும் 3 மடங்கு அதிகமாக முகேஷ் அம்பானியிடம் இருந்து சுமார் ரூ.12 லட்சம் பெறப்பட்டுள்ளது. இவை தவிர்த்து ஒரு-முறை வரி கட்டணமாக ரூ.20 லட்சம் பெறப்பட்டுள்ளது. ஒரு-முறை வரி கட்டணம் என்பதால் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே வாகன பதிவு செல்லுப்படியாகுமாம். இதற்கே ரூ.20 லட்சம் அடேங்கப்பா…

எத்தனை ரோல்ஸ்-ராய்ஸ் காரை தாங்க இவர் வாங்குவாரு!! முகேஷ் அம்பானியின் கேரஜில் இணைந்த 3வது கல்லீனன்!

இவை போதாதென்று ரூ.40,000-க்கு சாலை பாதுகாப்பு வரி வேறு. ஏற்கனவே கூறியதுபோல், முகேஷ் அம்பானியிடம் ரோல்ஸ் ராய்ஸ் பாண்டோம் ட்ராப்ஹெட் கூபே, கல்லீனன் மாடல்கள் மற்றும் புதிய-தலைமுறை பாண்டோம் நீட்டிக்கப்பட்ட வீல்பேஸ் என ஏகப்பட்ட ரோல்ஸ்-ராய்ஸ் கார்கள் உள்ளன. இதில் புதிய தலைமுறை பாண்டோம் நீட்டிக்கப்பட்ட வீல்பேஸின் விலையும் கிட்டத்தட்ட ரூ.13 கோடியாகும்.

Source link

Please follow and like us:
icon Follow en US
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube