சென்னை மாயாஜால் திரையரங்க வளாகத்தில் ‘விக்ரம்’ படம் இன்று எத்தனை காட்சிகள் திரையிடப்படுகிறது என்று வெளியான தகவல் சினிமா ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
16 ஸ்கிரீன்கள் கொண்ட சென்னை மாயாஜால் வளாகத்தில் இன்று மட்டும் கமலஹாசனின் ‘விக்ரம்’ திரைப்படம் 230 காட்சிகள் திரையிடப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த தகவல் கமல்ஹாசனின் திரையுலக வரலாற்றில் ஒரு சாதனை என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமின்றி இன்றைய அனைத்து காட்சிகளுக்குமான டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டு விட்டது என்பது ஒரு கூடுதல் சாதனையாகக் கருதப்படுகிறது.
இந்த உலகநாயகன் கமல்ஹாசனின் ‘விக்ரம்’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் முதல் காட்சி முடிந்த உடனேயே இந்த படத்திற்கு ஏகப்பட்ட பாசிட்டிவ் விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்த படம் தமிழில் வெளியான சூப்பர் ஹிட் படங்கள் ஒன்று என்பது இந்த விமர்சனங்கள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.