சிவகார்த்திகேயன் சந்திரமுகி 2 உடன் டான் படத்தில் இணைந்திருப்பது எப்படி – தமிழ் செய்திகள்


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த மிகப்பெரிய வெற்றி படங்களில் ஒன்றான ‘சந்திரமுகி’ படத்தின் இரண்டாம் பாகத்தின் அறிவிப்புக்கும் ‘டான்’ படத்திற்கும் சம்பந்தம் இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா, நயன்தாரா நடிப்பில் பி வாசு இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘சந்திரமுகி’. இந்த படம் வசூலில் மிகப்பெரிய சாதனை செய்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் பற்றிய தகவல் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்தது.

don040622 2

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் முக்கிய வேடத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ராகவா லாரன்ஸ் தற்போது ‘ருத்ரன்’ மற்றும் ‘துர்கா’ ஆகிய இரண்டு படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் அந்த படங்களை முடித்த உடன் அவர் ‘சந்திரமுகி 2’ படத்திற்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

chandramukhi040622 1

இந்த நிலையில் ‘டான்’ படத்தின் 25வது நாள் வெற்றி விழாவை சிறப்பாக கொண்டாட லைகா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த வெற்றி விழாவின்போது தான் ‘சந்திரமுகி 2’ படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.





Source link

Please follow and like us:
icon Follow en US
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube