தந்தை – மகள் பாசம் பேசும் ‘பொம்மை நாயகி’ டிரெய்லர் எப்படி? | யோகி பாபு பொம்மை நாயகியின் அதிகாரப்பூர்வ டிரைலர் வெளியிடப்பட்டது


பா.ரஞ்சித் தயாரிப்பில் யோகிபாபு நடித்துள்ள ‘பொம்மை நாயகி’ படத்தின் டிரெய்லர் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது.

பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் யாழி ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் படம் ‘பொம்மை நாயகி’. சிறுமி ஸ்ரீமதி, யோகிபாபு கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்தப் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் ஷான். கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ள படத்தின் பாடல்களை ‘தெருக்குரல்’ அறிவுரை எழுதியுள்ளார். சிறுமி ஸ்ரீமதியுடன் யோகிபாபு கடலருகே நின்றுகொண்டு கைகாட்டும் முதல் பார்வை ரசிகர்களை ஈர்த்தது. இந்நிலையில் படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

டிரெய்லர் எப்படி? – படம் தந்தைக்கும் மகளுக்கும் இடையிலான பாசத்தை அழுத்தமாக பேச முயற்சிப்பதை டிரெய்லர் உணர்த்துகிறது. தொடக்கத்தில் வரும் கடலலைக் காட்சிகள், தந்தை மகளுக்கான விஷுவல்ஸ் ஈர்க்கிறது. காமெடியில்லாமல் கதைக்கான முக்கியத்துவத்துடன் நகரும் டிரெய்லர் படத்தின் தரத்தை உணர்த்துகிறது.

காணாமல் போகும் மக்களைத் தேடும் நடுத்தர வர்க்கத் தந்தையின் போராட்டமாக விரியும் டிரெய்லரும், ‘தப்பு செஞ்சவனெல்லாம் சந்தோஷமா இருக்கலாம்; பாதிக்கப்பட்டவங்க?’ ‘போற உயிர் அவங்க கிட்ட போராடி போகட்டும்’ வசனங்கள் கவனிக்க வைக்கின்றன. அழுத்தமான கதைக்களத்துடன் நகரும் டிரெய்லர் ‘ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்’ என்ற கணக்காக ஈர்க்கிறது. படம் வரும் பிப்ரவரி 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.டிரெய்லர் வீடியோ:

Source link

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube