நான் பாவனி ரெட்டி கண்ட்ரோலில் தான் இருக்கின்றேன் என்று கமல்ஹாசன் முன் அமீர் கூறியிருக்கும் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் அமீர் மற்றும் பவானி ரெட்டி ஆகியோரும் உண்டு, இருவரும் பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போது காதலித்து வந்ததாகவும் கூறப்பட்டது. அமீர் தனது காதலை வெளிப்படையாக கூறிய நிலையில் பாவானி ரெட்டி தனது காதலை வெளிப்படையாக இதுவரை கூறவில்லை.
இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னரும் இருவரும் நெருக்கமாக இருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில், தற்போது பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் அமீர் – பாவானி ரெட்டி இருவரும் ஜோடியாக நடனம் ஆடுகிறார்கள்.
இந்த நிலையில் வரும் ஞாயிறு அன்று ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியின் புரமோ வீடியோ சற்று முன் வெளியாகி உள்ளது. இதில் சிறப்பு விருந்தினராக கமல்ஹாசன் நடித்து உள்ளார். இந்த நிகழ்ச்சியில் கமல்ஹாசனின் பாடல்களுக்கு போட்டியாளர்கள் நடனம் ஆடுகின்றனர்.
அந்த வகையில் ‘மன்மதன் அம்பு’ படத்தில் இடம்பெற்ற ‘நீ நீல வானம்’ என்ற பாடலுக்கு பாவானி ரெட்டி மற்றும் அமீர் நடனம் ஆடினர். மிக அபாரமாக இருவரும் நடனமாடியதை பார்த்த நடுவர் ரம்யா கிருஷ்ணன் மற்றும் சிறப்பு விருந்தினர் கமல்ஹாசன் ஆகியோர் ஆச்சரியமடைந்தனர்.
அப்போது அமீர் கூறியபோது ‘இந்த பாடலைப் பொறுத்தவரை நான் நடன இயக்குனரா? அல்லது பாவனி நடன இயக்குனரா? என்பது சந்தேகமாக இருக்கிறது என்றும், முதல் மூன்று நாட்களுக்கு மட்டும் தான் அவர் என் கண்ட்ரோலில் இருக்கிறார் என்றும், அடுத்த மூன்று நாட்களில் நான் அவருடைய கண்ட்ரோலில் இருக்கிறேன் என்றும் கூறினார். இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
ஓ.. அப்படியா விசயம்.. ?? #பிபி ஜோடிகள் 2 – வரும் ஞாயிறு இரவு 7:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #பிபிஜோடிகல்2 #BiggBossJodigal2 #விஜய் தொலைக்காட்சி #விஜய்டிவி pic.twitter.com/AoKGD1WqaE
— விஜய் தொலைக்காட்சி (@vijaytelevision) ஜூன் 2, 2022