‘இந்த மாதிரி ஒரு ரிலீஸை என் வாழ்நாளில் பார்த்ததில்லை’ – நடிகர் கமல் நெகிழ்ச்சி | விக்ரம் படம் பிரமாண்ட ரிலீஸ் பற்றி நடிகர் கமல்


‘இந்த மாதிரி ஒரு ரிலீஸை என் வாழ்நாளில் நான் பார்த்ததில்லை’ என நடிகர் கமல்ஹாசன் விக்ரம் படம் குறித்து நெகிழ்ந்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில் ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் ‘விக்ரம்’. அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படத்தை ராஜ்கமல் நிறுவனம் மற்றும் டர்மரீக் மீடியா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. பிரம்மாண்ட முறையில் நேற்று வெளியான இத்திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. விமர்சன ரீதியாகவும் நல்லபடியாக சொல்லப்படுகிறது.

முதல்நாள் படத்துக்கு பிரம்மாண்ட வரவேற்பு கிடைத்தது. இதனிடையே, நேற்றிரவு ரசிகர்களுடன் அமர்ந்து நடிகர் கமல்ஹாசன் படம் பார்த்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில், “விக்ரம் படத்தை இவ்வளவு தூரம் கொண்டுச் சேர்த்த அனைவருக்கும் நன்றி. ரசிகர்களுடன் உட்கார்ந்து படம் பார்ப்பது என்பது விருதுகளைவிட பெரிது. நாங்கள் எதிர்பார்த்த இடங்களில் எல்லாம் ரசிகர்கள் ரசித்தார்கள்.

படத்துக்கு வரவேற்பு பிரம்மதமாக உள்ளது. மனோசரித்திரா முதன்முதலில் ரிலீஸ் ஆனபோது எந்த மாதிரியான பாராட்டுக்கள் எனக்கு ஆந்திராவில் கிடைத்ததோ, அதேமாதிரியான பாராட்டு இப்போதும் அங்கு கிடைத்துள்ளது. தமிழகத்திலும், மும்பையிலும் அதேபோன்று எதிர்பார்ப்புகள் இருந்தன. வெளிநாடுகளைப் பொறுத்தவரை, அமெரிக்காவில் மட்டும் கிட்டத்தட்ட 2000 பிரிண்டுகள் ரிலீசாகி உள்ளது. இந்த மாதிரி ஒரு ரிலீஸை என் வாழ்நாளில் நான் பார்த்ததில்லை” என்று தெரிவித்துள்ளார்.





Source link

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube