கிரிக்பஸ் நிகழ்ச்சியான மேட்ச் பார்ட்டியில் சேவாக் இது தொடர்பாகக் கூறும்போது, “காலம் மாறியிருந்தது, செலக்ஷன் கமிட்டி சேர்மன் ஸ்ரீகாந்த் என்னிடம் கேட்டார், ‘என்ன செய்யப் போகிறாய்?’ என்று. நான் நன்றாக ஆடிக்கொண்டிருக்கும் போதே என்னை அணியிலிருந்து தூக்கி விட்டனர். நல்ல டச்சில் தான் இருந்தேன். நான் என்ன செய்ய வேண்டும்? என்றேன்.
இதையும் படிங்க: தோனி ட்ராப் செய்தது சரியா?- ஓய்வை நினைத்த சேவாக், தடுத்த சச்சின்
அதாவது ஆசியக் கோப்பையில் அனைத்துப் போட்டிகளிலும் நான் ஆடுவேன் என்று நீங்கள் நினைத்தால் என்னை தேர்வு செய்யுங்கள் இல்லை என்றால் வேண்டாம். பிறகு ஆசியக் கோப்பைக்கு முன்பாக தோனியிடம் ஸ்ரீகாந்த் பேசினார், அப்போது தோனி, என்னிடம் ‘விரூப்பா நீ ஆடுவாய்’ என்றார்.
அதன் பிறகு நிறைய ஆடினேன், ஆனால் இதை நான் யாரிடமும் இதுவரை பகிர்ந்ததில்லை. ஏனெனில் நான் என்ன செய்ய வேண்டும் என்பது எனக்கு தெரிந்திருந்தது” என்றார் சேவாக்.
சேவாக் அடுத்து முத்தரப்பு தொடரில் 2 அரைசதங்கள் விளாசினார். ஆசியக் கோப்பை பைனலில் இலங்கையிடம் இந்தியா இருந்தாலும் சேவாக் 2 அரைசதங்கள், ஒரு சதம் எடுத்தது குறிப்பிடத்தக்கது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரையிலான செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.