I think the govt should be the voice of the voiceless says CM MK Stalin


வாக்கு வங்கி அரசியலுக்காக நலத்திட்டங்களை திமுக அரசு செயல்படுத்துவதில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தென்மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின் சிவகங்கை மாவட்டத்திலிருந்து தனது பயணத்தை தொடங்கினார்.

சிங்கம்புணரி அடுத்த கோட்டை வேங்கைப் பட்டி அருகே 9 வருடங்களுக்கு பிறகு 3 கோடியே 11 லட்ச ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்ட சமத்துவபுர வீடுகளை முதலமைச்சர் திறந்து வைத்தார்.

சமத்துவபுர வளாகத்தில் நிறுவப்பட்ட மார்பளவு பெரியார்சிலையை திறந்து வைத்த அவர் பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட வீடுகளை நேரில் பார்வையிட்டார். சமத்துவவுர வளாகத்தில் அமைக்கப்பட்ட நூலகம் , குழந்தைகள் வளர்ச்சி மைய கட்டடம் போன்றவற்றையும் திறந்து வைத்து பார்வையிட்டார்.

காரையூர் சோளம்பட்டி விலக்கு அருகில் நடந்த விழாவில் 119 கோடியே 68 லட்சம் மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். 59 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதன்பின்னர் பொதுமக்களிடம் உரையாற்றிய முதலமைச்சர் வீரமங்கை வேலு நாச்சியார் வாழ்ந்த ஊரில், பெண் காவலர் பயிற்சி மையம் தொடங்க வேண்டுமென எம்.பி. கார்த்தி சிதம்பரம் கோரிக்கை வைத்திருப்பதாகவும், இதுகுறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்றும் உறுதி அளித்தார்.

அதன்பின்னர் புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் பல்வேறு துறை சார்பில் 81.13 கோடி மதிப்பிலான 138 திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார். 164 கோடியே 85 லட்சம் மதிப்பிலான ஆயிரத்து 394 திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும் 47 ஆயிரத்து 278 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அதன்பின்னர் உரையாற்றிய முதலமைச்சர் தமிழக மக்களுக்காக ஒவ்வொன்றையும் பார்த்து, பார்த்து செய்வதாக பெருமிதம் தெரிவித்தார். வாக்கு வங்கிக்காக எந்த திட்டத்தையும் செயல்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்த முதலமைச்சர் மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள், இருளர் இன மக்களுக்கு வாக்கு வங்கி பெயரளவில் உள்ளதா என கேள்வி எழுப்பினார். அவர்களுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வாக்கு வங்கி இல்லாதவர்களுக்கும்திட்டங்களை கொடுக்கும் அரசு தான் திமுக அரசு.

நான்காம் தர மக்களுக்காக செயல்படும் அரசு என்பதை இருமாப்போடு கர்வத்தோடு சொல்லிக்கொள்ள பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

உங்களால் உருவாக்கப்பட்ட அரசாக உள்ளது. எத்தனை ஏழை மக்கள் வாழ்வு தரம் உயர்த்தபடுகிறது என்பதையே சாதனையாக நினைக்கிறேன். விளிம்புநிலை மக்களுக்கும், மாற்றுதிறனாளிகள், திருநங்கைகள் உள்ளிட்ட குரலற்றவர்களின் குரலாக இருக்க கூடிய அரசாக இருக்க வேண்டும் என்று எண்ணுகிறேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மக்கள் தான் முக்கியம் அப்படிப்பட்ட அம்மக்களுக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்று பதவிக்கு வரவேண்டும் என்று எண்ணிதான் திமுக வந்தது, பதவிகள் முக்கியம் அல்ல, எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்தும் போது வாக்கு வங்கிகாகத்தான் திட்டத்தை செயல்படுத்துகிறோம் என்று விமர்சனம் செய்யக்கூடியவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

மக்களுக்கான அரசாக நடத்துவேன் என்று முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்னும் நான் தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறினார்.

முன்னதாக புதுக்கோட்டை மாவட்டத்திற்கு சென்ற முதலமைச்சருக்கு 11 இடங்களில் பூர்ண கும்ப மரியாதையுடன் செண்டை மேளங்கள் முழங்க தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர். மதுரை சாலையில் உள்ள ரோஜா இல்லத்தில் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்களுடன் ஆலோசனை நடத்தினார்.

இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.



Source link

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube