கைதி 2 படத்தில் கார்த்தி லோகேஷ் கனகராஜ் ஸ்ரீ பிரபு பற்றிய முக்கிய தகவல்கள் – தமிழ் செய்திகள்


இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்த ‘கைதி’ திரைப்படம் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகும் என்று கூறப்பட்ட நிலையில் லோகேஷ் கனகராஜ், விஜய் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படத்தை இயக்கினார். அதன்பின் கமல்ஹாசனின் ‘விக்ரம்’ திரைப்படத்தை இயக்கினார்

இந்த இரண்டு படங்களும் மிகப்பெரிய வெற்றி பெற்றதையடுத்து தற்போது மீண்டும் அவருக்கு விஜய் நடிக்க உள்ள ‘தளபதி 67’ படத்தை இயக்கும் வாய்ப்பு லோகேஷ்க்கு கிடைத்துள்ளது. அடுத்தடுத்து பெரிய ஸ்டார்களை இயக்கும் வாய்ப்பு கிடைத்ததால் ‘கைதி 2’ படம் தள்ளிப் போயிருந்த நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளர் சமீபத்தில் அளித்த தகவலின்படி ‘தளபதி 67’ படம் முடிந்தவுடன் ‘கைதி 2’ தொடங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இந்த தகவல் ரசிகர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. எனவே அடுத்த ஆண்டு இறுதியில் ‘கைதி 2’ படத்தின் படப்பிடிப்பு தொடங்க வாய்ப்பு இருப்பதாகத் தெரிகிறது.

kaithi2 11062022m1

ஏற்கனவே சமீபத்தில் பேட்டியளித்த லோகேஷ் கனகராஜ் ‘கைதி’ திரைப்படத்தில் கார்த்தி, ஒரு கட்டப்பையுடன் சென்று கொண்டிருப்பார் என்றும் அதில் அவர் வாங்கிய கோப்பைகள் என்றும் அவர் ஒரு கபடி விளையாட்டு வீரர் என்றும் தெரிவித்திருந்தார். மேலும் அர்ஜூன் தாஸ் கேரக்டர் கொலை செய்யப்படவில்லை என்றும் ஒரு சஸ்பென்ஸை உடைத்தார்.

எனவே ‘கைதி 2’ படத்தின் அடுத்த முதல் பாகத்தை விட இன்னும் பல சுவாரஸ்ய தகவல்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source link

Please follow and like us:
icon Follow en US
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube